9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Final Aptitude Test ) நடைபெறும் வாரங்கள் அறிவிப்பு. - kalviseithi

Dec 18, 2019

9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Final Aptitude Test ) நடைபெறும் வாரங்கள் அறிவிப்பு.திட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இடைநிலை வகுப்பு பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு , தங்களது ஆர்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அத்துறையில் சிறந்து விளங்கும் கல்வி உளவியலாளர்கள் மூலம் அம்மாணவர்களுக்கு வழிகாட்டுதலே இத்தேர்வின் முக்கிய நோக்கமாகும் . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8 , 51 , 999 மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு நடத்தப்பட உள்ளது . இத்தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படும் .

இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட பார்வை 2 இல் குறிப்பிட்டுள்ளவாறு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது . இதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் பயிற்சிக்காக TNTP இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வினை எழுதும் வகையில் நாட்டமறித் தேர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் . இத்தேர்வு நடத்தும் முன் பள்ளியில் இணையதள வசதியுடன் கூடிய கணினி செயல்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும் . இத்தேர்வினைக் கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை நியமித்தல் வேண்டும் .

           செயல்திட்டம் ( Action Plan ) 

முதல் நிலை 

மாதிரி பயிற்சித் தேர்வு வினாத்தாள் தற்போது 90 வினாக்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . இந்த 90 வினாக்களுக்கு 1 அரை மணி நேரத்தில் பதில் அளிக்கும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் இணையதள வழியாக பயிற்சி அளிக்க வேண்டும் . இது இறுதித் தேர்வில் கலந்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும் .

இரண்டாவது நிலை

இறுதித் தேர்விற்கு முன்பாக ( Pilot Study ) முன்மாதிரி தகுதிநிலைத் தேர்வு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும் . தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் கீழ்க்காணும் 3 வகையான பள்ளிகளில் நடைபெறுதல் வேண்டும் . உயர்நிலை , மேல்நிலை ஆகிய இரு பிரிவிலும் நகர்ப்புறம் , கிராமப்புறம் ஆகிய அமைவிடங்களில் பள்ளிகளைத் தேர்வு செய்ய வேண்டும் .

1 . ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளி
2 . பெண்கள் மட்டும் பயிலும் பள்ளி
3 . இருபாலர் பயிலும் பள்ளி

இந்த முன்மாதிரித் தேர்வு இணையதளம் மூலம் 2020 , ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் . 90 வினாக்கள் கேட்கப்படும் . 90 நிமிடத்தில் விடையளிக்க வேண்டும் .

மூன்றாம் நிலை

ஜனவரி , 2020 இரண்டாவது வாரத்தில் 10ஆம் வகுப்பிற்கும் நான்காவது வாரத்தில் 9ஆம் வகுப்பிற்கும் நாட்டமறி இறுதி தேர்வு ( Aptitude Final Test ) இணையதளம் வழியாக நடத்தப்படும் . மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவ்வப்போது இதுகுறித்து வழங்கப்படும் அறிவுரைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வை நல்ல முறையில் நடத்தி முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை இப்போதிருந்தே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி