விவசாய நகைக்கடனை இனி 7% வட்டியில் வழங்கக்கூடாது - வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2019

விவசாய நகைக்கடனை இனி 7% வட்டியில் வழங்கக்கூடாது - வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு.


விவசாய நகைக்கடனை, 7 சதவீத வட்டியில் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4 சதவீதம் வட்டிக்கு விவசாய நகைக்கடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை நகைகளை அடகு வைத்து கடன் பெற கையொப்பமிட்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் போதும். அரை மணிநேரத்தில் நகைக்கடன் பெற முடியும். மேலும் இதே வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் பெற விவசாய நிலங்களின் விபரங்களை வழங்கவேண்டும். அது தொடர்பான கரத்தீர்வை ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த கடன் திட்டத்தில் 9 சதவீத வட்டிக்கே விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது என்றாலும், அதில் 5 சதவீதம் மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு வழங்கும் நடைமுறை  செயல்பாட்டில் இருந்து வருகிறது. விவசாய நகைக்கடன் பெறுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல என்பது தொடர்பான புகார்கள் அதிக அளவில் சென்ற நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நகைக்கடன் திட்டம் உண்மையான விவசாயிக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை உறுதி செய்ய இனி ‘கிசான் கிரெடிட் கார்டு’ வழியாக மட்டுமே கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கிசான் கிரெடிட் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 11 சதவீத நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் நிறுத்தப்படுகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் வழங்கப்பட்ட விவசாய நகைக்கடன் வட்டியை உயர்த்தி, 2020 ஏப்ரல் 1-ம் தேதிக்குள் வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடன் வட்டியும் 7 சதவீதத்தில் இருந்து 9.25 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால கடனுக்கு 9.25 சதவீத வட்டியும், ரூ.3 லட்சத்திற்கு மேலான கடனுக்கு 9.50 சதவீத வட்டியும் வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. விவசாயிகளாக இல்லாதவர்களும் விவசாய நகைக்கடன் பெற்று வருவதாக வந்த புகாரில் நடவடிக்கை என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. ஏழை மக்களை எப்படி எல்லாம் சிரமப்படுத்த முடியுமோ படுத்துங்கள்.ஏழைகள் எளிதாகப் பெற்றுவந்த ஒரே கடன் நகைக் கடன் தான்.இதிலும் மண்ணை அள்ளிப் போடுங்கள். கந்துவட்டி தலைவிரித்தாடட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப்போவதில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கிவிடக் கூடாது. இவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வேலை கொடுத்தாலும் 7000 மற்றும் 8000 ரூபாய் சம்பளத்தில் கொடுக்க வேண்டும். இன்னும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து பணியிடங்களும் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பே வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் எங்கே செல்வது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்னதான் வழி? தனியார் பள்ளிகளிலும் உரிய வாய்ப்பும் கிடையாது? அப்புறம் எதற்கு தகுதித் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? 2013 -ல் தேர்ச்சிபெற்று தற்போது அது ஏழாண்டுகளில் காலாவதி ஆகப் போகிறது. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன பிரயோஜனம்? இப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது பணிபுரிந்து கொண்டிருப்போரின் வயிற்றில் அடிப்பதும் பாவமே! படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பி.எட் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு கல்லூரிகளை நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பு என்பதையே இல்லாமல் செய்து கொண்டிருக்கும் நிலையை மாற்றவும் அரசு முன்வரவேண்டும். நிறைய ஏழைக்குடும்பங்கள் இப்படி அரசு வேலைவாய்ப்பு மூலம் தான் நடுத்தர நிலைக்கு உயர்கிறார்கள். இப்படி வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்பட்டால் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்ல வேண்டும். தயவு செய்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வாழ்வளியுங்கள். அனைத்து பணியிடங்களையும் நிரப்புங்கள். அதை குறைத்து விடாதீர்கள் என்பதை கோரிக்கையாக வைக்கின்றோம். செவிசாய்க்குமா அரசு???????????????????

      Delete
  2. ஆமை புகுந்த வீடு உருப்படாது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி