ராஜினாமா செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!! - kalviseithi

Dec 8, 2019

ராஜினாமா செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!!


20 ஆண்டுகள் பணியில் இருந்த பின்னர் ராஜினாமா செய்த அரசு ஊழியர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து யமுனா பவர் லிமிட்டட் நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்குநீதிபதிகள் சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,விருப்ப ஓய்வும், ராஜினாமாவும் வெவ்வேறு என்பதை தெளிவுபடுத்தியதோடு,ராஜினாமா செய்துவிட்டு செல்லும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி இல்லை என தெரிவித்தது.


தொடர்ந்து,அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பாக ராஜினாமா செய்தால் பென்ஷன் இல்லை என குறிப்பிட்ட நீதிமன்றம், ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியது.


மேலும், 2003 டிசம்பருக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றும்,ஓய்வூதிய சட்டம் அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கும், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், சிவில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி