நாட்டிலேயே முதல் முறையாக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், கணினி வாயிலாக தேர்தல் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு! - kalviseithi

Dec 14, 2019

நாட்டிலேயே முதல் முறையாக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், கணினி வாயிலாக தேர்தல் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு!


நாட்டிலேயே முதல் முறையாக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், கணினி வாயிலாக, தேர்தல் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலரின் கீழ், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, ஏழு அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக, தேசிய தகவல்மையம் உதவியுடன், மாநில தேர்தல் ஆணையம், புதிய, 'சாப்ட்வேர்' தயாரித்துள்ளது. கருவூலத் துறையில் இருந்து, ஊழியர்களின் விபர படிவம் பெறப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர், எந்த ஒன்றியத்தை சேர்ந்தவர், அவரது சொந்த ஊர், ஓட்டுச்சாவடி விபரம், வாக்காளர் அடையாள அட்டை எண் விபரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.அதை, கணினியில் பதிவேற்றம் செய்து, பணி ஒதுக்கப்படுகிறது. சொந்த ஊர், குடியிருக்கும் பகுதிகளில் பணியாற்ற முடியாதது போல, 'சாப்ட்வேர்' தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன்படி உத்தரவு வழங்கப்படுகிறது.உரிய காரணங்கள் இன்றி, பணியை மறுக்கவோ,பரிசீலிக்கவோ இயலாது.இதில், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு, 3 கி.மீ. சுற்றளவில் பணி வழங்கப்படுகிறது. மலைக் கிராம ஓட்டுச்சாவடிகளுக்கு தகுதியானவர்களை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு, 'ஆன்லைன்' வழியாக, பணி ஒதுக்கீடு செய்வது, தமிழகத்தில் தான் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது என, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 comments:

 1. I got order with 110km my working place chengam but I have to go near melmaruvathuvar very very worst for appointment of preceding officers system

  ReplyDelete
 2. Intha software vachu than 100 km distance ku male orders set panamudium

  ReplyDelete
 3. Totaly waste of time and human power for this software
  I requested to all
  Please avoid this type of orders issues

  ReplyDelete
 4. I also requested to kalviseithi author please convey my message to that software prepared election officials and software engineers don't delete my comments

  ReplyDelete
 5. பெருமை பட எதுவும் இல்லை. POஅனுப்பவும் உள்ளவர்களுஉள்ளவர்களுக்கு PO1.PO2.PO3என்றும் P3வேலைக்கு PO1என்றும் குளறுபடி தான்

  ReplyDelete
 6. ஆசிரியரால் மட்டுமே தேர்தல் பணி சரியாகச் செய்ய முடியும் .வாக்குசாவடி பணி.ஓட்டு எண்ணிக்கை ஆசிரியர் கையில் உள்ளது பல இடங்களில் P0.P01.P02.P03.P05.P06பணி ஓதுக்கீடுல்்குளறுபடி ஏன் .தேர்தல் குளறுபடி இல்லாமல் நடக்கும் போது. தேர்தல் அலுவலர் பணி நியமனத்தில் ஏன் குளறுபடி. நிர்வாகத்தால் குளறுபடி இல்லாமல் ஏன் பணி ஓதுக்கீடு செய்ய முடிய வில்லை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி