பி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி ஆசிரியராகலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2019

பி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி ஆசிரியராகலாம்


இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பிஎட் தேர்ச்சி பெற்றவர் கள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி களில் கணித ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளைப் போல பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களும் பி.எட் படிக்க 2015-16-ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக மொத்தமுள்ளபி.எட் இடங்களில் பொறியியல் பட்டதாரி களுக்கு 20 சதவீதஇடங்கள் ஒதுக் கப்பட்டன. அதன்படி பி.இ, பி.டெக் பட்டதாரிகள் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளின்கீழ் பி.எட் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.இதற்கிடையே இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் தின்படி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (‘டெட்‘) தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனைத்துவிதப் பள்ளி களிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ‘டெட்’ தேர்வின்போது பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்கள் தேர்வு எழுத அனு மதிக்கப்படாததால், அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது.

இதனால் பி.எட் படிப்பு களில் சேர பொறியியல் பட்டதாரி கள் ஆர்வம் காட்டவில்லை. இதைத் தொடர்ந்து இடஒதுக்கீடு 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்து கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் ‘டெட்’ தேர்வு எழுத உயர்கல்வித் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. அதன்படி பி.இ படிப்பில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து இருந்தாலும் அவர்கள் பி.எட் முடித்து பின்னர் ‘டெட்’ தேர்வை எழுதி பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு கணித ஆசிரிய ராகப் பணிபுரியலாம்என்று உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் பி.எட் படிப்புகளில் கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் நிலை குறித்து அரசாணையில் விளக்கம் தரப்படவில்லை.

இதனால் அந்த பாடப் பிரிவுகளில் பி.எட் படிப்பவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த விவகாரத் தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரிசெய்ய தமிழக அரசு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 comments:

  1. ஏற்கனவே டெட் தேர்ச்சி பெற்ற பல. ஆயிரம் பேர் வேலை இன்றி உள்ளனர். புதிதாக பொறியியற் பட்டதாரிகள் படித்து வேலை பெறமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. Pass panavanvanluka posting poda govt thuivupulla. Ethula Vara go pass panuranuga

      Delete
  2. கனவு கானணுங்கள்...நாங்களும் அதை தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறோம்..இங்கனம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்..

    ReplyDelete
  3. யாருவேனா அரசியல்பதவிக்கு வரலாம் என்ற நல்ல எண்ணத்தில் அரசியல்சாசனம் கொடுத்த உரிமமையை கையில் வைத்துக்கொண்டு வரன்முறையேயில்லாமல் செயல்படவிட்டால் இப்படித்தான்
    என்ன படித்தால் என்ன
    டீகடை வைக்கவும்,
    பக்கோடா போடவும் பழகிக்கச்சொல்லப்பட்ட என்ஜினியர்களுக்கு இப்ப டீச்சிங்வைரக்கும் கொண்டு வந்து விட்டு அடுத்து சத்துணவுஅம்மா,துப்புரவு பணியாளர்கள் பணிவரைக்கும் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...

    ReplyDelete
  4. Teaching முடிச்சாவன்களுக்கு job Ila இதுல இது vara vilangitum

    ReplyDelete
  5. Ethu padichalum teacher na teachers eng job ku exam elutha arasanai illaya amaichare

    ReplyDelete
  6. Election varuthu vote ku Panam koduka Panam elliamal requirement endra kedethana valaiya parkuranga

    ReplyDelete
  7. இப்படி எல்லாம் எப்படி அய்யா யோசனை வருகிறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி