'பிட் இந்தியா' - பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் போட்டி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2019

'பிட் இந்தியா' - பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் போட்டி அறிவிப்பு.


'பிட் இந்தியா' செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு, பரிசு வழங்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில், 'பிட் இந்தியா' இயக்கம், கல்வி நிறுவனங்களில் துவக்கப்பட்டு உள்ளது. உடற்பயிற்சிகள் செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில், இரண்டுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் நடக்கும் வகையில், பள்ளி மைதானம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் தினமும், விளையாட்டு, யோகா, இசை ஆகியவற்றில், ஏதாவது ஒன்று நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம், ஒரு மணி நேரமாவது, மாணவர்கள் விளையாட வேண்டும்.

இதுபோன்ற வசதிகள் மற்றும் செயல்பாடுகள் உள்ள பள்ளிகள், பிட் இந்தியா போட்டியில் பங்கேற்கலாம். இதற்காக, தங்களின் உடற்கல்வி பயிற்சி விபரங்களுடன், வரும், 31ம் தேதிக்குள், www.fitindia.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி