பி.இ., பட்டதாரிகளுக்கு கணித ஆசிரியர் பணி தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா? - kalviseithi

Dec 12, 2019

பி.இ., பட்டதாரிகளுக்கு கணித ஆசிரியர் பணி தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா?


''பி.இ., முடித்தோருக்கு பள்ளியில் கணித ஆசிரியர் என்ற அரசின் உத்தரவால், பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது,'' என இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.சங்கர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில், 'டெட்' தேர்வு எழுதி ஆசிரியர் வேலைக்காக 35 ஆயிரம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பி.இ., முடித்தவர்கள் பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கலாம் என்ற அரசு அறிவிப்பு வேடிக்கை. ஆண்டுக்கு பி.இ., முடித்து 1 லட்சம், பி.எட்., முடித்து 4 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர். இளங்கலை, முதுநிலை அறிவியல், கலை பட்ட படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், பொருளியல், மொழி பாடம் படித்தவர்கள், பி.எட்., முடித்தால் தான் ஆசிரியர் ஆக முடியும். பாடத்திட்டமே இல்லாத இன்ஜினியரிங் பட்டதாரிகளால் எப்படி கல்வி கற்றுத்தர முடியும்.

இதனால் அவர்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பி.இ., முடித்து, பி.எட்., படிக்கலாம் என்ற அரசின் அனுமதிக்கு 3ஆண்டுக்கு முன்பே ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அரசு பள்ளியில் ஏற்கனவே 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை உபரியாக வைத்துள்ளனர். அதே போன்று இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரிகளாக தரம் உயர்த்த கல்வித்துறை முன்வரவில்லை.இச்சூழலில் பி.இ., முடித்தவர்களை பள்ளியில் கணக்கு பாடம் எடுக்க நியமிக்கலாம் என்ற உத்தரவு ஏற்புடையதல்ல. அவரவர் கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும், என்றார்.

7 comments:

 1. கணக்கு வாத்தியாரை இதற்கு மேல் அவமானம் செய்ய முடியாது

  ReplyDelete
 2. கணக்கு வாத்தாயாருக்கு அவமானம் இல்லை.. பி.இ முடிச்சவனுக்குத்தான் பி.இ பி.எட்் முடிச்சு 6-8 ம் வகுப்புக்கு வாத்தாயாராக .....(6 வருடங்கள் படித்து)

  ReplyDelete
 3. பதற்றம் வேண்டாம்.அவன் பி.எட் முடிக்க வேண்டும்.பின் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மேலும் இவற்றையெல்லாம் தாண்டி vacancy இருக்க வேண்டும்.பிறகு பார்க்கலாம்.திறமை இருந்தால் வரட்டுமே.நம் மதிப்பை யாராலும் குறைக்க இயலாது நம்மைத் தவிர....

  ReplyDelete
 4. B.E பட்டதாரிகள் Physics, Chemistryயும் படிக்கிறார்கள். ஆனால் அவர்களை கணித ஆசிரியருக்கு மட்டும் தகுதியானவர் எனக்கூறுவது ஏனென்று புரியவில்லை அனைத்து பொறியியல் துறைகளுக்கும் கணிதம் தான் அடிப்படை எனவே பிஎஸ்சி கணிதம் படித்தவர்களை பொறியியல் வல்லுனர்களாக பணி அமர்த்தப்படுவார்களா

  ReplyDelete
  Replies
  1. They are studying computer science also

   Delete
  2. Computer scienceஐ மட்டும் ஒரு பாடப்பிரிவாக அறிவிக்கவே அறிவிக்கமாட்டார்கள்..
   பக்கத்தில் உள்ள ஆந்திராவில் இருந்தாலும் சரி, கேரளாவில் இருந்தாலும் சரி கண்டிப்பாக தமிழகத்தில் கணினி துறையில் முன்னேற்றம் உண்டாகும் எந்த வேளையும் கொண்டு வர மாட்டார்கள்..
   ஏனெனில் அரசின் கொள்ளை(கை)முடிவு...
   ஒரு வேலை அப்படி தமிழக பள்ளிக்கல்வியில் கணினி அறிவியல் பாடப்பிரிவாக கொண்டு வந்தால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
   தனியார் துறை பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமல்லவா??????
   ஏனெனில் தமிழக அரசின் கொள்ளை(கை)முடிவு...

   Delete
 5. இந்த அரசு மக்களுக்கு ஏதும் செய போவதற்கு ila so announced பன்னிக்கிறத காலத்த ஒட்டி விடுவங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி