CTET - மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு: 24 லட்சம் பேர் எழுதியதில் 5½ லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2019

CTET - மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு: 24 லட்சம் பேர் எழுதியதில் 5½ லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி!


நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் திபெத்திய பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (‘சிடெட்’) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நடத்துகிறது.20 மொழிகளில் நடைபெறும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு இந்த ஆண்டு கடந்த 8-ந்தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 110 நகரங்களில் 2 ஆயிரத்து 935 மையங்களில் 2 தாள்களாக தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 28 லட்சத்து 32 ஆயிரத்து 120 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 24 லட்சத்து 5 ஆயிரத்து 145 பேர் தேர்வு எழுதினார்கள்.அதில் முதல் தாள் தேர்வை 14 லட்சத்து 13 ஆயிரத்து 390பேரும், 2-ம் தாள் தேர்வை 9 லட்சத்து 91 ஆயிரத்து 755 பேரும் எழுதியது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதியவர்களுக்கான முடிவு நேற்று வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய 24 லட்சத்து 5 ஆயிரத்து 145 பேரில், 5 லட்சத்து 42 ஆயிரத்து 285 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

இதில் ஆண் தேர்வர்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 718, பெண் தேர்வர்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 558, திருநங்கைகள் 9 பேர் அடங்குவார்கள். தேர்ச்சி சதவீதம் 22.55 ஆகும். தேர்வு நடைபெற்று முடிந்த 19-வது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இதுதான் முதல் முறை என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

6 comments:

  1. இத pass பண்ணி என்ன செய்ய

    ReplyDelete
    Replies
    1. Kv trb and navodaya tgt prt exam eluthalam.. anga ctet+trb+interview vechu than edukuranga... Two years once

      Delete
  2. போஸ்டிங் போடுற எக்ஸாம்லாம் நம்மால பாஸ் பண்ண முடியாது. நாம பாஸ் பண்ற எக்ஸாமுக்கு போஸ்டிங் போட மாட்டாங்க. இதான் சார் வாழ்க்கை.

    ReplyDelete
  3. TN tet19-paper1- இல் பாஸ் ஆணவர்கள் இதுவரைக்கும் கவுன்சிலிங் கூப்படவவில்லய் 10 நல்ல கூப்புடுறதா மினிஸ்ட்டர் சொன்னாரு இதுவரைக்கும் கூப்படவில்லை அட்மின் இதுசம்பந்தமாக்க ஏதாவது நியூஸ் போடுங்க அல்லது மினிஸ்ட்டர் கிட்ட கேளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. 2017 la Tet pass pannavangalukke innum CV nadakala. Ungalukku enna avasaram. Porumaiya irunga.

      Delete
  4. If in ctet get 102 mks .then what please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி