DSE - இனி விடுமுறை, தேர்வு, நலத் திட்டங்கள் மற்றும் பல்வேறு மாணவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2019

DSE - இனி விடுமுறை, தேர்வு, நலத் திட்டங்கள் மற்றும் பல்வேறு மாணவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருகையை உறுதிபடுத்தும் வகையிலும் , மாணவர்கள் பாதுகாப்பாகப் பள்ளிக்கு வருகை புரிந்த தகவலை பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் மாணவர்களின் வருகை குறித்த தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இத்திட்டத்தின்படி மாணவ / மாணவியர் வருகை புரியாத நாட்கள் பற்றிய விவரம் மட்டுமின்றி மாணவ / மாணவியரின் அரசுப் பொதுத்தேர்வு தேர்ச்சி விவரங்கள் , பருவத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் , தேசிய திறனாய்வுத் தேர்வு , ஊரகத் திறனாய்வுத் தேர்வு பற்றிய அறிவிப்பு மற்றும் முடிவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா நலத் திட்டங்கள் , 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ / மாணவியர் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வழங்கப்படும் ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பித்தல் , சுதந்திர தினம் , குடியரசு தினம் , குழந்தைகள் தினம் , பள்ளி ஆண்டு விழா போன்ற விழாக்களுக்குப் பெற்றோரை அழைத்தல் , உள்ளூர் விடுமுறை பற்றிய தகவல் , கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கும் நாள் / கடைசி வேலை நாள் , பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெறுதல் பற்றிய விவரங்கள் பெற்றேராரது கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது . எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் விவரங்கள் , பெற்றோரது விவரங்கள் மற்றும் பெற்றோரின் கைப்பேசி எண் ( Mobile No . ) ஆகிய விவரங்களை ஏற்கனவே EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதை மீள சரிபார்த்து உறுதி செய்யுமாறும் , மேற்படி விவரங்களை இதுநாள் வரை தலைமையாசிரியர்கள் பதிவு செய்யாமல் இருப்பின் , உடன் அவ்விவரங்களை பதிவு செய்யுமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக வரம்பிற்குள் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

         - பள்ளிக்கல்வி இயக்குநர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி