NMMS - தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு முக்கிய அறிவுரைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2019

NMMS - தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!


15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனறித் தேர்வுக்கான  தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு முக்கிய அறிவுரைகள்

1 . தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் வினாத்தாள் புத்தகத்தில் ( Question Booklet ) விடைகளைக் குறிக்க வேண்டாம் என்றும் , வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் மட்டுமே ( OMR Answer Sheet ) விடைகளைக் குறிக்க வேண்டும் என்பதனையும் தேர்வர்களுக்கு தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களின் மூலம் அறிவுறுத்தல் வேண்டும் .

2 . ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் . ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மட்டுமே வழங்கப்படும் . எனவே எக்காரணம் கொண்டும் 20 மாணவர்களுக்கு குறைவாகவோ அல்லது அதற்கு மேலோ ஒரு தேர்வறையில் அமர அனுமதிக்கக் கூடாது . ( கடைசி அறைதவிர )

3 . தேர்வு முடிந்தவுடன் தேர்வர்கள் வினாத்தாள் புத்தகத்தை ( Question Booklet ) எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது .

4 . இத்தேர்விற்கு ( OMR ANSWER SHEET ) விடைத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது . இதில் தேர்வர்கள் விடைத்தாளில் உள்ள கலங்களைப் பூர்த்தி செய்வது குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளன . அனைத்து தேர்வறைகளிலும் தேர்வர்கள் விடைத்தாட்களைப் பூர்த்தி செய்வது குறித்த அறிவுரைகளைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும் . தவிரவும் ஒவ்வொரு விடைத்தாளில் தேர்வர் தேர்விற்கு வருகை புரிந்தவிவரம் ( Status of Candidate ) P Or A என கருப்பு அல்லது சிவப்பு நிறமையினால் அறைகண்காணிப்பாளரால் ( Hall Supervisor ) நிழற்படுத்த வேண்டும் .

5 . அறைக் கண்காணிப்பாளர் தேர்வர்களின் பதிவெண் மற்றும் பெயர் ஆகிய கலங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின் அவர் கையொப்பமிடவேண்டும் இவ்வறிவுரைகளைத் தவறாது பின்பற்றுமாறு தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு முதன்மைக் கண்காணிப்பாளரால் தக்க அறிவுரைகள் வழங்கப்படல் வேண்டும் . தேர்வர்கள் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டத்தில் தேதியுடன் கையொப்பமிட வேண்டும் . தேர்வர்கள் பதிலளிக்கும் போது தாம் எந்தகலத்திற்கான விடை சரி என நினைக்கிறாரோ அந்த கலம் கருப்பு மை கொண்டபால் பாய்ண்ட் பேனாவினால் மட்டுமே நிழற்படுத்தப்பட வேண்டும் .

6 . பெயர் பட்டியலில் திருத்தத்தினையும் சரிவர மேற்கொள்ளப்பட வேண்டும் . திருத்தம் அனைத்தும் சிவப்பு மையினால் மட்டுமே செய்யப்படவேண்டும் . மேலும் வருகைப் புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் OMR விடைத்தாட்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி