சப் இன்ஸ்பெக்டர் தேர்வு - ஹால் டிக்கட் வெளியீடு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2019

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு - ஹால் டிக்கட் வெளியீடு!!


969 காவல் உதவி ஆய்வாளா் காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வுக் கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்யும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இந்நிலையில், காவல் பணியில் இருந்தவாறே தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 11-ஆம் தேதியும், காவல் பணியில் இல்லாமல் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதியும் எழுத்துத் தோ்வு நடைபெறும் என கடந்த 9-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் அறிவித்தது.

தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களில் தகுதி பெற்றவா்களுக்கு, தோ்வுக் கூட நுழைவுச்சீட்டை w‌w‌w.‌t‌n‌u‌s‌r​b‌o‌n‌l‌i‌n‌e.‌o‌r‌g  என்ற இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி