TRB - உதவிப் பேராசிரியர் தேர்வு தொடர்பான புதிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு. ( நாள் : 19.12.2019 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2019

TRB - உதவிப் பேராசிரியர் தேர்வு தொடர்பான புதிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு. ( நாள் : 19.12.2019 )


1. அரசு கலை ( ம ) அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 12 / 2019 நாள் . 28 . 08 . 2019 மற்றும் 04 . 10 . 2019 அன்று வெளியிடப்பட்டது . 15 . 11 . 2019 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் ஏற்கனவே விண்ணப்பித்து பணி அனுபவச் சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடாத விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் , கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து சில கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் அவ்விவரங்களை பதிவு செய்திட பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது .

 2 . தற்போது ஏற்கனவே முழுமையாக விண்ணப்பித்து பணி அனுபவச் சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடாத விண்ணப்பதாரர்கள் பணி அனுபவ சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடவும் ( அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் ) .

3 . அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்துள்ள பல்வேறு விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டதின் பேரில் அறிவிக்கையின் படி குறித்த நேரத்தில் 15 - 11 - 2019 மாலை 5 மணிக்குள் விண்ணப்ப பதிவினை ( Registration ) முடித்தவர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தற்போது வாய்ப்பு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது .

4 . மேற்காணும் பதிவுகளை விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக பணி அனுபவ சான்றிதழ்களை மட்டும் பதிவேற்றம் செய்திடவும் / விண்ணப்ப கட்டணம் செலுத்த தவறியவர்கள் கட்டணம் செலுத்திடவும் 19 . 12 . 2019 முதல் 21 . 12 . 2019 மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது . எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது .எனவே விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

4 comments:

  1. அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப்போவதில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கிவிடக் கூடாது. இவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வேலை கொடுத்தாலும் 7000 மற்றும் 8000 ரூபாய் சம்பளத்தில் கொடுக்க வேண்டும். இன்னும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து பணியிடங்களும் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பே வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் எங்கே செல்வது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்னதான் வழி? தனியார் பள்ளிகளிலும் உரிய வாய்ப்பும் கிடையாது? அப்புறம் எதற்கு தகுதித் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? 2013 -ல் தேர்ச்சிபெற்று தற்போது அது ஏழாண்டுகளில் காலாவதி ஆகப் போகிறது. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன பிரயோஜனம்? இப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது பணிபுரிந்து கொண்டிருப்போரின் வயிற்றில் அடிப்பதும் பாவமே! படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பி.எட் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு கல்லூரிகளை நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பு என்பதையே இல்லாமல் செய்து கொண்டிருக்கும் நிலையை மாற்றவும் அரசு முன்வரவேண்டும். நிறைய ஏழைக்குடும்பங்கள் இப்படி அரசு வேலைவாய்ப்பு மூலம் தான் நடுத்தர நிலைக்கு உயர்கிறார்கள். இப்படி வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்பட்டால் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்ல வேண்டும். தயவு செய்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வாழ்வளியுங்கள். அனைத்து பணியிடங்களையும் நிரப்புங்கள். அதை குறைத்து விடாதீர்கள் என்பதை கோரிக்கையாக வைக்கின்றோம். செவிசாய்க்குமா அரசு???????????????????

    ReplyDelete
  2. What will cut off English in BC, Trb assistant Professor

    ReplyDelete
  3. mr star pls give u mobile numberrrr

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி