பொதுத்தேர்வுக்கு தேவையான பொருட்களை பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 19 - ம் தேதிக்குள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் விநியோகிக்க தேர்வுத்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2020

பொதுத்தேர்வுக்கு தேவையான பொருட்களை பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 19 - ம் தேதிக்குள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் விநியோகிக்க தேர்வுத்துறை உத்தரவு.


நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு , இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகளுக்கான முதன்மை விடைத்தாட்கள் , கூடுதல் விடைத்தாட்கள் , வரைபடங்கள் , வரைகட்டத்தாட்கள் , அகல துணி வேய்ந்த காகித உறைகள் மற்றும் பிற இனங்களை பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 19 - ம் தேதிக்குள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் விநியோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . தேர்வு மையங்களுக்கான எழுது பொருட்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் அல்லது உதவி தலைமையாசிரியர் நேரில் வந்து பெற்றுச் செல்லுமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்திட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . அனைத்து தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றிடவும் அறிவுறுத்துமாறு அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1 . விடைத்தாள் பக்கங்கள் பள்ளித் தலைமையாசிரியரால் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் .

2 . மேற்படி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , போதுமான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாட்கள் , கூடுதல் விடைத்தாட்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் .

3 . தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விடைத்தாட்களை பெற்ற பின்பு , அதற்கான பதிவேட்டில் பாடவாரியாக பதிந்து பாதுகாப்பாக பராமரிக்க அறிவுறுத்த வேண்டும் .

4 . விடைத்தாட்கள் பெறும் பள்ளித் தலைமையாசிரியர் , தேர்வு மையத்திற்கு வரும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களிடம் விடைத்தாட்களை கணக்கிட்டு பதிவேட்டில் பதிந்த பின்னர் , முதன்மைக் கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்றுக் கொண்டு ஒப்படைத்தல் வேண்டும் .

5 . அனைத்து தேர்வுகளும் முடிந்தவுடன் தேர்வுக்குப் பயன்படுத்தியது போக மீதமுள்ள விடைத்தாட்களை பாடவாரியாக ( முதன்மை / கூடுதல் விடைத்தாட்கள் ) கணக்கிட்டு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்து அதற்கான ஒப்புகையைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் . மீதம் பெறப்பட்ட அனைத்து வகையான விடைத்தாட்களின் எண்ணிக்கையும் பதிவேட்டில் பள்ளித் தலைமை ஆசிரியர் பதிந்திடல் வேண்டும் எனவும் தெரிவித்தல் வேண்டும் .

6 . தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மேல்நிலை முதல் / இரண்டாமாண்டு மற்றும் இடைநிலைத் தேர்வுகளுக்கு பாட வாரியாக முதன்மை / கூடுதல் விடைத்தாட்கடள போதுமான எண்ணிக்கையில் பெற்றுக் கொண்டோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .

7 . போதுமான எண்ணிக்கையில் எழுது பொருட்கள் தங்கள் தேர்வு மையங்களுக்கு பெறப்பட்டதை உறுதி செய்து பின்னர் , பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநருக்கு இதுகுறித்து தெரிவித்திட வேண்டும் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி