நெட் தேர்வில் உதவி பேராசிரியர் பணிக்கு 60,147 பேர் தேர்ச்சி - kalviseithi

Jan 2, 2020

நெட் தேர்வில் உதவி பேராசிரியர் பணிக்கு 60,147 பேர் தேர்ச்சி


நெட் தேர்வில் 60 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ நடத்தி வந்த இந்த தேர்வை கடந்த ஆண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.  நடப்பாண்டிற்கான நெட் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 219 நகரங்களில் 700க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற தேர்வில் 7 லட்சத்து 93 ஆயிரம் பட்டதாரிகள் பங்கேற்றனர்.

அதன் முடிவு https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியாகியது. அதில் 60 ஆயிரத்து 147 பேர் உதவிப்பேராசியர் பணிக்கும், ஐந்தாயிரத்து 92 பேர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தகுதி பெற்றதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

3 comments:

  1. இருக்கிறவர்களுக்கே பணி இல்லை....இனி இவர்களும் காத்து இருக்க வேண்டியதுதான்....பணம் இருப்பவர்கள் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம்....

    ReplyDelete
  2. Wrong news December exam is not publishwd. june exam result was published.

    ReplyDelete
  3. December net exam result தான் இது . June net result ,July மாதம் வெளியிடப்பட்டது .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி