70 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - CEO நடவடிக்கை!! - kalviseithi

Jan 4, 2020

70 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - CEO நடவடிக்கை!!


கடந்த கல்வி ஆண்டில் நடந்த
மேல்நிலை வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப் பிடும் பணியில் , கவனக்குறைவாக செயல்பட்ட 70 முதுகலை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு , வேலூர் முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் நோட்டிஸ் அனுப்பி அதிரடித்துள்ளார் .

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது . மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பிடும் பணி என்பது , தேர்வுப்பணியை விட முக்கியத்துவம் வாய்ந்தது . 10ம் வகுப்பு விடைத்தாளை பட்டதாரி ஆசிரியர்களும் , மேல்நிலை வகுப்பு விடைத்தாள்களை முதுகலை ஆசிரியர்களும் மதிப்பீடு செய்கின்றனர்.

 இந்த பணியின்போது , ஆசிரியர்கள் கவனக் குறைவாக செயல்படுவதால் , மதிப்பெண் விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பதாக அரசுத்தேர்வுகள் துறைக்கு புகார்கள் சென்றன .

கடந்த கல்வி ஆண்டில் நடந்த பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பிடும் பணியில் , மாணவர் களின் மதிப்பெண் விவரத்தில் மாறுதல் இருப்பது , மறுமதிப்பீடு செய்தபோது கண்டறியப்பட்டது . இதையடுத்து , சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் , கடந்த கல்வி ஆண்டில் மேல்நிலை வகுப்பு பொதுத் தேர்வின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 70 பேரிடம் விளக்கம்கேட்டு முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் . 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி