பள்ளிக்கல்வி - விடுமுறை அனுபவிக்கும் அரசு பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2020

பள்ளிக்கல்வி - விடுமுறை அனுபவிக்கும் அரசு பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம்!


பள்ளிக்கல்வி - விடுமுறை அனுபவிக்கும் அரசு பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு காலத்திற்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் - கோருதல் ,

பார்வையில் காணும் தங்களது மனுவில் vacation leave அனுபவிக்கும் அரசுப் பணியாளர்கள் பொறுத்த வரை அவர்கள் அனுபவித்த other kinds of eligible leave மருத்துவ சான்றுடன் கூடிய மருத்துவ ( ஈட்டா ) விடுப்பு மகப்பேறு விடுப்பு , கருசிதைவு விடுப்பு போன்ற ( சம்பளம் மற்றும் படிகளுடன் ) முழு ஊதியத்துடன் கூடிய சாதாரண வகை விடுப்புகளுக்கும் ஏற்ப ஈட்டிய விடுப்பு குறைத்து அவர்களது கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிகளின்படி சரியான நடைமுறையா என்பதை தெளிவு படுத்துமாறு கோரப்பட்டுள்ளது .

தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி விடுமுறை அனுபவிக்கும் பணியாளர்கள் அனுபவித்த ஊதியமில்லா அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே தமிழ்நாடு விடுப்பு விதிகளில் விதி 9 ( a ) ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி