கல்வித்துறை தொடர்பாக அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்த விவரத்தை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2020

கல்வித்துறை தொடர்பாக அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்த விவரத்தை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


கல்வித்துறை தொடர்பாக அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்த விவரத்தை முதன்மை கல்விஅலுவலர்கள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு, சிறப்பு ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியர் பணிநியமனம், கணினி பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. மாவட்ட அளவிலும் பல்வேறு வழக்குகள் பதிவாகி, ஏழு ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது.

இதனால், அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை கல்வித்துறை சந்தித்து வருகிறது. பல திட்டங்கள் உரிய முறையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு போய் சேராத நிலையும் ஏற்படுகிறது. இவற்றுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், நிலுவை வழக்கு விவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.

மாவட்ட முதன்மை நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம் நடுவர் நீதிமன்றங்களில், பிறந்த தேதி மாற்றம், பள்ளி முகவாண்மைவழக்குகள், நிலம் தொடர்பான வழக்குகள், குற்ற வழக்குகள் இருப்பின், அதன் விவரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வரும், 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

1 comment:

  1. Friends anybody know about Chennai corporation and Coimbatore corporation school vacant ,will it come ? This year they did not mention when other department result released? Pg trb

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி