தபால் ஓட்டு போடத் தெரியாதா அரசு ஊழியர்களுக்கு, பெரும்பாலான வாக்குகள் செல்லாது என அறிவிப்பு. - kalviseithi

Jan 3, 2020

தபால் ஓட்டு போடத் தெரியாதா அரசு ஊழியர்களுக்கு, பெரும்பாலான வாக்குகள் செல்லாது என அறிவிப்பு.


ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் நிலவரம் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அளித்த தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு ஊழியர்கள் அளித்த வாக்குகள் பெரும்பாலும் செல்லாத வாக்குகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பல ஆண்டுுகளாக தேர்தல் பணியில்
ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் பெரும்பான்மையான வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு இருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதாக அவர்கள் வேதனை அடைந்தனர்.

குறிப்பாக, தருமபுரி ஏரியூர் ஒன்றியம் பகுதியில் பதிவான 135 தபால் வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என்றும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் பதிவான 60 வாக்குகளில் 58 தபால் வாக்குகள் செல்லாதவை என்றும் தெரிய வந்துள்ளது.

செல்லாத ஓட்டுகள் பதிவானதில் ஒட்டன்சத்திரம் புதிய சாதனையையே படைத்துள்ளது.ஒட்டன்சத்திரத்தில் பதிவான 74 தபால் வாக்குகளில் 73 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் மற்றும் நிலக்கோட்டை ஒன்றியம் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டு வாக்குகளைப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளும் பிரிக்கப்பட்டு வருகின்றன

இதனிடையே, கொடைக்கானலில் 17 தபால் வாக்குகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 comments:

 1. Adhu yepadi namba mudilaye.oru vela podavendiyavagaluku podama vera yarukachum pota adhu selladha vote agirukumo.

  ReplyDelete
 2. இருக்கிற இடம் தெரியாமல் இருந்துட்டு போய்விட வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. எப்படி இருக்கணும்😊

   Delete
 3. Podalanga dinamalar mari heading podatha teacherkku mathippukudu🤐🙏💔

  ReplyDelete
 4. இத்தனை வருஷம் தபால் ஓட்டு சரியா போட்டவங்களுக்கு இந்த தேர்தலில் போடதெரியவில்லை.கொஞ்சமாவது யோசிங்க.

  ReplyDelete
 5. Epdi vote podanunu sample copy kudithangala

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி