TNPSC - குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி சென்னையில் பிப். 2-ல் தொடங்குகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2020

TNPSC - குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி சென்னையில் பிப். 2-ல் தொடங்குகிறது!


*.அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் குரூப் 1, குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் பிப்ரவரி 2-ல் தொடங்குகிறது.

*.இதுகுறித்து அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ந.வாசுதேவன் வெளியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குருப் 1, குருப் 2 தேர்வுகளுக்கு எங்கள் மையம் சார்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

*.இந்த பயிற்சியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்மற்றும் தீண்டாமை ஒழிப்புமுன்னனி ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறோம். தொழில்நுட்பரீதியாகவும், மாணவர் திறனை வெளிக்கொணரும் விதமாகவும் கலந்துரையாடல் வடிவத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள்.

*.இங்கு படித்த 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிகின்றனர். இந்த பயிற்சியில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட அனைத்துப்பிரிவு மாணவர்களும் பங்கேற்கலாம்.

*.சென்னை பாரிமுனையில்உள்ள சிஐடியு அலுவலகத்தில்வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும். அதன்படிபயிற்சி வகுப்புகள் பிப்.2-ம் தேதி தொடங்குகிறது.

*.இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை பாலாஜி - 90432 29495, செளந்தர்- 90950 06640, வாசுதேவன்-94446 41712ஆகிய எண்களில் தொடர்புகொண்டு அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி