TNPSC - குரூப் 4ஐ தொடர்ந்து குரூப் 2 தேர்வில் மெகா மோசடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2020

TNPSC - குரூப் 4ஐ தொடர்ந்து குரூப் 2 தேர்வில் மெகா மோசடி!


டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் சென்னையில் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக உள்ள சித்தாண்டி மனைவி, இரண்டு சகோதரர்கள் உட்பட 4 பேர் முறைகேடாக முதல் 10 இடங்கள் பிடித்து வெற்றி வெற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்பட்ட உதவி ஆய்வாளரின் சகோதரரான காரைக்குடி சார் பதிவாளரின் நேர்முக உதவியாளர் வேல்முருகனை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பணம் கொடுத்து மோசடியாக வெற்றி பெற்ற 200 பேர் பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் முற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது தெரியவந்தது. இதில் முறைகேடாக தேர்வு எழுதிய 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

இந்த மோசடி வழக்கு விசாரணையை, தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தது. அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரம் திருக்குமரன் (35), தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21), ஆவடி வெங்கட்ரமணன் (38), திருவாடனை கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), பண்டிருட்டி சிறு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி கவுரிபேட்டை காலேஷா (29), டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் பழைய வண்ணாரப்பேட்டை ஓம் காந்தன் (45), தேனி சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ் (45), ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி(30), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தை சேர்ந்த வினோத்குமார்(34), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியை சேர்ந்த சீனுவாசன்(33),கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம்  கிராமத்தை சேர்ந்த விக்கி(எ)த.விக்னேஷ்(25), கடலூர் மாவட்டம் பண்ரூட்டி  தாலுகா தனலட்சுமி நகரை சேர்ந்த சிவராஜ்(31) ஆகியோரை என 14 பேரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முகப்பேரை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின்படி இடைத்தரகர்கள் மூலம் ரூ.7.50 லட்சம் பணம் கொடுத்து தேர்வு எழுதிய ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் குறித்த விபரங்களை சிபிசிஐடி போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் மெகா மோசடி நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குருப் 4 தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்து மோசடியில் சிக்கியுள்ள ராமேஸ்வரம் தேர்வு மையம் குரூப் 2ஏ தேர்வின் போது முதல் 100 இடங்களில் 37 இடங்களை அந்த மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் கடந்த ஓராண்டாக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரியாக நல்ல ஊதியத்தில் பணியில் உள்ளனர். குரூப் 4 முறைகேடு போன்று கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வு எழுதிய நபர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முறைகேட்டிலும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் உதவியுடன் ஜெயகுமார் ஆகியோர் தான் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இடைத்தரகராக செல்பட்ட சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூர் கிராமத்தை சேர்ந்த சித்தாண்டி என்பவர், சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். இவர் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு இடைத்தரகராக செயல்பட்டு முறைகேடாக தேர்வில் வெற்றி பெற செய்துள்ளார்.

மேலும், அவரிடம் பணம் கொடுத்த அனைவரும் ராமநாதபுரம் மையத்தில் தான் தேர்வு எழுதிய உள்ளனர். உதவி ஆய்வாளர் சித்தாண்டியிடம் குரூப் 2 தேர்வுக்கு ரூ.15 லட்சமும், குரூப் 4 தேர்வுக்கு ரூ.9 லட்சமும் 200 பேர் நேரடியாக பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த மோசடி பின்னணியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நேரடியாக ஈடுபட்டு உள்ளதும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இல்லாமல், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர் சித்தாண்டியின் மனைவி பிரியா தமிழகத்தில் 5வது இடமும், அவரது சகோதரன் வேல்முருகன் இருந்து தொடங்கி உள்ளது. இந்த மெகா மோசடியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லாமல் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் இடைத்தரர்கள் மட்டும் செய்து இருக்க முடியாது. எனவே இதன் பின்னணியில் உள்ள உயர் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

45 comments:

  1. Good.. நல்ல tnpsc,, நல்ல தமிழ்நாடு

    ReplyDelete
  2. தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கும் போதே இவ்வளவு முறைகேடுகள் என்றால்,வெறும் interview post ன் நிலைமை ?

    ReplyDelete
  3. First nega trb paruga computer science exam ah paruga idha vida perusa sikkum

    ReplyDelete
    Replies
    1. Yes sir omr exam la ye ivlo problem copmputer exam online la soilava venum

      Delete
  4. Trb. Tnpsc Aavin,Cooperative bank money play important roles

    ReplyDelete
  5. TOPPERS ACADEMY NAMAKKAL 9442966976

     2019 ஆம் ஆண்டு முதுகலை தமிழாசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

     நாமக்கல் முதன்மையர் கழக மையத்தில் 57 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்


     மாநில அளவில் 4வது மதிப்பெண் பெற்றுள்ளனர்

     SCA பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்

     ST பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்

    21 நபர்கள் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்


    ஜனவரி 5 முதல் 2020-21 ஆம் கல்வியாண்டு / வர உள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை(TOPPERS ACADEMY NAMAKKAL) நாமக்கல் முதன்மையர் கழகம் நடத்தி வருகின்றது


    நீண்ட கால பயிற்சி , வாரந்தோறும் தேர்வு ,ஆன்லைன்தேர்வு நடைபெறும்.

    பயிற்சி நடைபெறும் இடம்: R. C. நடுநிலைப்பள்ளி , திருச்சிரோடு, காவல் நிலையம் அருகில்,நா மக்கல். தொடர்புக்கு : 9442966976

    TAMIL SELECTION LIST
    http://trb.tn.nic.in/PG_2019/msg1.htm

    OTHER DEPT. TAMIL SELECTION LIST
    http://trb.tn.nic.in/PG_2019/revisedlist/msg4.htm











    at January 04, 2020 Links to this post
    Email This
    BlogThis!
    Share to Twitter
    Share to Facebook
    Share to Pinterest
    Wednesday, January 1, 2020
    TOPPERS ACADEMY- PG TRB TAMIL - முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
    2020-21 ஆம் கல்வியாண்டு/ வர உள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் (TOPPERS ACADEMY NAMAKKAL)நாமக்கல் முதன்மையர் கழகம் ஜனவரி 5 (ஞாயிற்றுக்கிழமை ) அன்று தொடங்க உள்ளது.

    நீண்ட கால பயிற்சி , வாரந்தோறும் தேர்வு , ஆன்லைன்தேர்வு நடைபெறும்.

    பயிற்சி நடைபெறும் இடம்: R.C நடுநிலைப்பள்ளி , திருச்சிரோடு, காவல் நிலையம் அருகில், நாமக்கல். தொடப்புக்கு : 9442966976
    குறிப்பு: வேறு எங்கும் கிளைகள் இல்லை
    at January 01, 2020 Links to this post
    Email This
    BlogThis!
    Share to Twitter
    Share to Facebook
    Share to Pinterest
    Wednesday, November 6, 2019
    பட்டதாரி ஆசிரியர் தேர்வு -2008-09 ஆம் ஆண்டு வினாத்தாள்

    10.11.2019 அன்று தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வு வகுப்பு நாமக்கல் TOPPERS ACADEMY மையம் தொடங்க உள்ளது.தொடர்புக்கு- 8220204200 9442966976
    பட்டதாரி ஆசிரியர் தேர்வு -2008-09 ஆம் ஆண்டு வினாத்தாள்

    ReplyDelete
    Replies
    1. Ava Ava vaitherichal la Iruka unaku inga vandhu advertisement kekkudha

      Delete
    2. Ethu private coaching centre advertisement.

      Delete
    3. Avargaludaiya website erukku. This is advertisement.if you need check website. That private coaching centre OK no problem

      Delete
  6. இவ்வளவு பிராடு வேலைகள் நடக்கும்போதும் Exam Hallல் சொல்லுவாங்கப் பாருங்க ஒரு வார்த்தை. Question paper ஐ உங்க முன்னாடி தான் பிரிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Fraud panavangala nenga ketkanum hall supervisor adharku epadi porupu aavar. Avarudaya dutya avar pakurar avlothan. Nenga exam ealudha standing duty pakurar aasiriyarai kurai soladinga.

      Delete
  7. TOPPERS ACADEMY NAMAKKAL 9442966976

     2019 ஆம் ஆண்டு முதுகலை தமிழாசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

     நாமக்கல் முதன்மையர் கழக மையத்தில் 57 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்


     மாநில அளவில் 4வது மதிப்பெண் பெற்றுள்ளனர்

     SCA பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்

     ST பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்

    21 நபர்கள் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்


    ஜனவரி 5 முதல் 2020-21 ஆம் கல்வியாண்டு / வர உள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை(TOPPERS ACADEMY NAMAKKAL) நாமக்கல் முதன்மையர் கழகம் நடத்தி வருகின்றது


    நீண்ட கால பயிற்சி , வாரந்தோறும் தேர்வு ,ஆன்லைன்தேர்வு நடைபெறும்.

    பயிற்சி நடைபெறும் இடம்: R. C. நடுநிலைப்பள்ளி , திருச்சிரோடு, காவல் நிலையம் அருகில்,நா மக்கல். தொடர்புக்கு : 9442966976

    TAMIL SELECTION LIST
    http://trb.tn.nic.in/PG_2019/msg1.htm

    OTHER DEPT. TAMIL SELECTION LIST
    http://trb.tn.nic.in/PG_2019/revisedlist/msg4.htm

    ReplyDelete
    Replies
    1. sir revised list is not published in the trb website. how you mge like this? you know that counselling details Sir.

      Delete
    2. why Sir? next raid vara piranha.be careful.

      Delete
    3. Coaching centre website information sir

      Delete
    4. Private coaching Centre advertisement.website private centre

      Delete
  8. PG TRB TAMIL ONE CENTRE 57 TEACHERS SELECTED

    ReplyDelete
    Replies
    1. முதல்ல போய் படி ....

      Delete
    2. center la 57 pass panaka.evalo per padichaka theriuma.suma social media erukunu ethavathu onu sola kudathu boss

      Delete
  9. VERIFY AND FOUND CORRECT OR FALSE

    ReplyDelete
  10. VERIFY PG TRB TAMIL SELECTION LIST .FOUND CORRECT OR FALSE VERIFY

    ReplyDelete
  11. Pg trb tamil மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

    ReplyDelete
  12. Trb ya yaru sika vaikaradhu tnpsc sikiruchi and trb velipadaiya fradu thanam panaga computer science exam la adhaye marachi selection list vititaga ketalum sari case file panalum sari no use

    ReplyDelete
  13. Replies
    1. உங்களுக்கு வேற வேலை இல்லை யா.If U have proof go and complaint or study well.

      Delete
    2. Yenda proof court la trb cs TEACHER exam nadandha videos footage la ketaga kuduthucha government ne vela vagita nu trb yogiyam nu pesadha

      Delete
    3. Illa yega ipadi problem kelaparagaley yega namba matipom nu bayapadaraya

      Delete
  14. Thappu nadanthaal yaaraga erunthaalum sollalaam


    ReplyDelete
  15. Government doing their work properly and appreciated.study well and get job all the best. Trb and tnpsc

    ReplyDelete
  16. Donot worry. Study well and get job all brothers and sisters

    ReplyDelete
  17. Nallavanga thandikkapadakoodaathu

    ReplyDelete
  18. Naalavangalukku all times nallathe nadakkum

    ReplyDelete
  19. First study well don't concentrate others

    ReplyDelete
    Replies
    1. Ipadidhanada orutha YouTube la video pota😂😂😂😂

      Delete
  20. பத்தாம் வகுப்பு பொதுதத்தேர்வுக்கு ஒவ்வொரு மாணவரும் எங்கே உட்கார்ந்து தேர்வு எழுதவேண்டும் என்று Hall plan போடும் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வுக்கு எவரும் எங்கேயும் உட்காரலாம் என்பதும் பணம் கொடுத்த வர்கள் அருகருகே உட்கார்ந்து தேர்வு எழுத அணுமதிக்க உதவவா என்ற கேள்வி எழுவதை தேர்வு வாரியம் தெளிவுபடுத்துமா?

    ReplyDelete
  21. This is happens because of quota system
    That method Abolish and on line tes
    Should conduct

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி