TRB தேர்வு நடைமுறைகளை மாற்ற, கல்லுாரி பேராசிரியர்கள் அமைப்பு கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2020

TRB தேர்வு நடைமுறைகளை மாற்ற, கல்லுாரி பேராசிரியர்கள் அமைப்பு கோரிக்கை!


டி.என்.பி.எஸ்.சி.,யை போல, டி.ஆர்.பி., தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வு நடைமுறைகளை மாற்ற, கல்லுாரி பேராசிரியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் நிறுவனர் கார்த்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள புகார்:

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவியில், 1,060 காலியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி., தேர்வில், 200க்கும் மேற்பட்டவர்களுக்கு, மதிப்பெண்களை திருத்தி, முறைகேடு நடந்துள்ளது. இந்த தேர்வில் முறைகேடு செய்த, அனைத்து தேர்வர்கள் மீதும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை; தகுதி நீக்கமும் செய்யவில்லை. அவர்கள், பணம் வாங்கிய இடைத்தரகர்களை அணுகுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, அவர்களை, அரசு பதவியில் சேர தடை விதிக்க வேண்டும்.அதேபோல், கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பதவிக்கு, 2,331 பணியிடங்களை நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் முறைகேடு நடப்பதற்கு, அதிக வாய்ப்புள்ளது. தனியார் கல்லுாரிகளில் தரப்படும் அனுபவசான்றிதழை, மதிப்பெண் கணக்கில் எடுக்க கூடாது.

அடிப்படைகல்வி மற்றும் தகுதி சான்றிதழ்களை வைத்து மட்டும், விண்ணப்பங்களை ஏற்க வேண்டும். அனைவரது மதிப்பெண் விபரங்களை, மற்றவர்கள் பார்க்கும் வகையில், வெளிப்படையாக வெளியிட வேண்டும். முறைகேடுக்கு வழிவகுக்காமல், தேர்வு மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை மாற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

5 comments:

  1. Nee sollitara udanae seiyya trb board la irrukira avanga avlo nallavangala, kash kudu seiyrom mamu, nanga kash koduthathan eduvum seivom, summa ,Kaila kash, Vails dosai, idli,

    ReplyDelete
  2. தனியார் B.ed கல்லூரிகளில் நடக்கும்ோசடிகள் விரைவில் அரங்கே ற்றம்

    ReplyDelete
  3. தனியார் B.ed கல்லூரிகளில் நடக்கும்ோசடிகள் விரைவில் அரங்கே ற்றம்

    ReplyDelete
  4. இச்செய்தி உண்மை. தவறுகள் நடப்பதற்கு நிறைய வழி உண்டு. yes கொடுக்க வேண்டிய இடத்தில் noவும் no கொடுக்க வேண்டிய இடத்தில் yesம் நிறைய பேர் online னில் apply செய்துள்ளார்கள் என்று வருத்தத்தில் உள்ளார்கள். இதற்கு ஏதாவது solution கிடைக்க வேண்டும்.

    ReplyDelete
  5. இதை வைத்து reject செய்யலாம் என்று மற்றவர்களுடைய கருத்தும் நிலவுகிறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி