TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2020

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்!


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 196  பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க அரசுடன் ஆலோசித்து வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது. 2017ல் நடைபெற்ற தேர்வில் முறைகேடு என எழுந்த புகாரில் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு 2017-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வினை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 2 ஆயிரம் பேர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களில் 196 பேர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து விசாரணை நடத்தியதில் 196 தேர்வர்கள் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுதலாக பெற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் 196 பேர் பல லட்சம் கொடுத்து மதிப்பெண் அதிகமாக வாங்கி இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

10 comments:

  1. epdi... application ellam over aana piragu??

    Court la.. enna sonneenga???
    Avangala thadai panna... It violates RIGHT TO EQUALITY nu,,,

    Inga vandhu... thadai ya??? TRB sema nadipu...

    ReplyDelete
  2. Good decision.. sollatheenga ... seyalpaduthungal ... appothaan nambikkaivarum..

    ReplyDelete
  3. acting.. unmaiya ulachu padichavangaluku job a kuduthurukanum nee..tnpsc seiuthenu trb in nadipunu ithu elarukum therium.. tnpsc thapusenchanvangala thandichiruku.. ulachavangaluku job udanea kuduthiruku.. but trb nee..? ur acting therium..

    ReplyDelete
  4. 2017ல் நடந்த PG TRB தேர்வின் OMR விடைத்தாள்களை RESCAN செய்ய ஏன் TRB தேர்வு வாரியம் முன்வரவில்லை???

    ஏன் RESCAN செய்யவேண்டும்?

    ஆசிரியர் தகுதித்தேர்வு - 2017:
    நடந்த தினம்: April 29 & 30, 2017
    OMR scan செய்த agency : Datatec Methodex
    OMR rescan செய்ததில் கண்டுபிடிக்கப்பட்ட fraud: 190+ தேர்வர்கள்

    POLYTECHNIC விரிவுரையாளர் தேர்வு-2017:
    நடந்த தினம்: September 16, 2017
    OMR scan செய்த agency : Datatec Methodex
    OMR rescan செய்ததில் கண்டுபிடிக்கப்பட்ட fraud: 196 தேர்வர்கள்

    PG TRB தேர்வு-2017:
    நடந்த தினம்: July 2, 2017
    OMR scan செய்த agency : Datatec Methodex
    OMR rescan செய்யப்படவில்லை???????
    April 2017 ல் நடந்த தேர்வில் முறைகேடு…September 2017 ல் நடந்த தேர்வில் முறைகேடு… இடைப்பட்ட JULY 2017 ல் நடந்த தேர்வில் முறைகேடு சந்தேகம் எழாமல் இல்லை… (Note: OMR Scan செய்தது ஒரே Agency.)

    சந்தேகத்திற்கான காரணம்:
    1) 2017ல் நடந்த PG TRB தேர்வில், வேதியியல் பாடத்தில் தவறாகக் கேட்கப்பட்ட 6 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் பணிநியமனம் வழங்கப்படவில்லை.... ஏன்???
    2) மருத்துவர் ராமதாஸ் உட்பட பலர் கேட்டும், Rescan செய்ய முன்வராமல் இன்றளவும் முன் வராமல் மௌனம் காப்பது ஏன்??
    3) இணைக்கப்பட்டுள்ள audio வில் 1.00 முதல் 1.20 வரை கேளுங்கள்
    (TRB க்கு ஒருவர் call செய்த போது நடந்த உரையாடல்)

    ReplyDelete
    Replies
    1. Whatsapp msg.. oru audio kooda iruku...

      Phone call pesraanga (TRB officer):

      "chemistry ku 6 mark ellarukum kodutha.. OMR rescan panna vendi varum... Paadhi peru maatuveenga.. parava illaya"

      Delete
  5. முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தவிர (196) மற்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் ஃபோர் போல பணி வழங்கலாமே

    ReplyDelete
    Replies
    1. yes...

      but reexam vacha.. 2lakh candidates * 600 rupees = 12crores (approx)..
      plus old exam revenue around 10 crores... (but own OMR scanning machine kooda vaangaama... exam cancel panniduvaanga...)

      sama agency scan panna.. other three exams pathi pesa maatanga...

      Delete
  6. TET-190+ frauds... no cancellation of exam...
    PGTRB OMR never rescanned...
    Special teacher... OMR rescanned before publishing the results..

    OMR scanning agency for all the four exams - DATATEC METHODEX

    But.. Polytech mattum cancelled...
    Y?????????????????????????????????????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி