பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு - பணிநிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிக்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2020

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு - பணிநிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிக்க கோரிக்கை!


பகுதிநேர ஆசிரியர்களின்
ஊதியஉயர்வு - பணிநிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிப்பு
வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில
ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கருணை
மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் மறைந்த தமிழக முதல்வர்
ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்கள்
ரூ.5ஆயிரம்  தொகுப்பூதியத்தில் உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை
தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி பாடங்களை நடத்திட
அனைவருக்கும் கல்வி இயக்க நிதியை பெற்று பள்ளிக்கல்வித்துறை மூலம்
நியமனம் செய்யப்பட்டோம்.

கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2ஆயிரத்து 700 மட்டுமே ஊதியஉயர்வு
வழங்கப்பட்டுள்ளது.இதனால் 9-வது ஆண்டாக பணிபுரியும் எங்களுக்கு தற்போது
தரப்படும் சம்பளம் ரூ.7ஆயிரத்து 700 தினக்கூலியைவிட குறைவானது.
வருடாந்திர சம்பளஉயர்வு 10 சதவீதம் தரப்பட்டிருந்தால் சம்பளம்
ரூ.10ஆயிரம் எப்போதே கிடைத்திருக்கும்.
16549 பேரில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்களின் நிதியை தற்போது பணிபுரிந்து
வரும் 12ஆயிரம் பேருக்கு பகிர்ந்து வழங்கினாலே ரூ.11ஆயிரம்வரை
வழங்கமுடியும்.

இதனுடன் 7-வது ஊதியக்குழு 30 சதவீதம் ஊதியஉயர்வை அமுல்செய்தால்
ரூ.15ஆயிரம் வரை அரசு வழங்க வழி இருக்கிறது. எனவே விலைவாசி உயர்வுக்கேற்ப
எங்களுக்கு சம்பள உயர்வை தர அரசு முன்வரவேண்டும்.

9 ஆண்டுகளாக பணிபுரியும் எங்களை பணிநிரந்தரம் செய்யாததால் அரசின்
பணபலன்களை பெறமுடியாமலும், போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ
காப்பீடு, பணி ஓய்வு மற்றும் இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின்
குடும்பங்களுக்கு குடும்பநலநிதி எதுவும் கிடைக்காமலும் வாழ்வாதாரத்தை
இழந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில் 10-வது கல்வியாண்டு
தொடங்கவுள்ள நிலையில் எங்களை பணிநிரந்தரம் செய்யாததால், மே மாதம் சம்பளம்
இதுவரை 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதால் அனைவருக்கும் ரூ.53ஆயிரம்வரை
இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கான பணிநியமன ஆணையில் மே மாதம்
சம்பளம் கிடையாது என குறிப்பிடாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கை எங்களை
மேலும் பாதிக்கிறது.

வேலைநிறுத்த காலங்களில் அரசின் உத்தரவின்படி ஊதியம் எதுவுமின்றி
முழுநேரமும் பள்ளிகளை திறந்து பாடம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு
அரசு சலுகைகளை செய்ய முன்வரவேண்டும் என எதிர்பார்த்து வருகிறோம்.
நாங்கள் நியமனம் செய்யப்பட்டதோடு 2-வது முறையாக ஆட்சி செய்யும் அதிமுக
அரசின் பட்ஜெட்டில் இதுவரை ஒருமுறைகூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு
சம்பளஉயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்புகள் வெளியிடாதது
எங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது.
ஒன்று எங்களை பணிநிரந்தரம் செய்யுங்கள். இல்லையெனில் ரூ.18ஆயிரம்
குறைந்தபட்ச சம்பளத்தை கொடுங்கள் என்ற இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி
வருகிறோம்.

3 ஆண்டுக்குமேல் பணிபுரிந்த 16ஆயிரம் துப்புரவு பணியாளர்களை சிறப்பு
காலமுறையில் பணியமர்த்தும் அரசு, 9 ஆண்டுகளாக பாடம் நடத்தும் 12ஆயிரம்
பகுதிநேர ஆசிரியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த முன்வரவேண்டும்.
தற்போது எங்களுக்கு ரூ.7ஆயிரத்து 700 சம்பளம்தர அரசு ஆண்டுக்கு
ரூ.100கோடி செலவிடுகிறது. எங்களை இடைநிலை ஆசிரியர்கள் நிலையில்
பணியமர்த்தினால் அரசு மேலும் ரூ.250கோடி நிதிஒதுக்கினோலே போதும்.

எனவே இம்முறையாவது பட்ஜெட்டில் 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட
வலியுறுத்தி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் 9487257203

33 comments:

  1. அய்யா முதல்வர் அவர்களே எங்களின் கோரிக்கைக்கு தனி கவனம் செலுத்தி பணிநிரந்தரம் செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. CM: Mudiyaathuuu... Ooodi pongada...

      Delete
    2. CM: Unvelaiya nee paruda.un orimai mattum nee kelu da.neee petroleum unakku velaiya kidiyathu ooooooodi poda dai poda.

      Delete
    3. Neeee ketalum unakku velaikidiyathu ooooodi podaaaaaaaaaaaaaaaaaaaa

      Delete
  2. Vaipu illa raja..
    Chi Mudiyadhu mudiyadhu... 😂😂😂

    This comedy perfectly match agudhu ungaluku..

    ReplyDelete
    Replies
    1. Unakku irukura velaium pora vaippu vanndhuchu raja.unakku endha velaium veikka vaipilla rajaaaaaaaaa

      Delete
  3. CM sir dhayavu senji idhugala adichi thorathuga andha 100 kodi achum micham agum social media vandhaley uyir ah vangudhuga yedha oru education site ponalum ivaga tholla thaga mudila ivagaluku 250 kodi selavu pandradhu onnu andha kasa kenathula podradhu onnu pls ivagala anupi viduga

    ReplyDelete
  4. We hope Government will do best.DOnot bother about the above comments given by unknown person who have no work.

    ReplyDelete
    Replies
    1. Unaku oru comedy vachiruka gowndamani comedy ama ivaru collector job resignation panitu porarudoi
      .... Adhuku mela yena varum nu ungalukey theriyum soilvadharku undrum illai

      Delete
    2. YENA YEGALUKU VELAI ILLAYA UNGALA POLA THANDAMA ONNU THUKU USE AGAMA 16500 POST WASTE AH IRUKU UNGALA THORATHITA ELIGIBLE TEST LA PASS ANA ENGALUKU JOB KEDAIKUM..

      Delete
  5. Part time la amma unavagathula plate kaluva kupidaraga poga aparam permanent pana soili keluga

    ReplyDelete
    Replies
    1. Ne poi poi plate kaluvittu salary vagitau experience certificate vagniva.apram pakkalam.un ketta ennathaium serthu kaluvittu va.apram msg podu.

      Delete
  6. பகுதிநேர ஆசிரியர்கள் 126 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக தொடர்ந்த பணி நிரந்தரம் வழக்கு 18/02/2020 அன்றே Disposed ஆகி விட்டது....

    தமிழக அரசை இனி எதிர்க்க முடியாது என்று பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்...

    போலி தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை தனி கவனம் செலுத்த வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Super sir Kunodada adichi thoradhidanum sir

      Delete
    2. Dai VELAKENNA nalaikudhana 18 date first thedhiya olunga paruda aparam pesuva nela yegala pathi pesara idhula oru aravekadu super nu comments vera

      Delete
    3. உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிநியமனம் எப்போது நடைபெறும்.

      Delete
    4. உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிநியமனம் எப்போது நடைபெறும்.

      Delete
    5. தளபதி no bad words...

      Delete
  7. Oh nega adhala vachirukigala sr Iruka unaku school la sweeper ku sr iruku unaku Iruka nee la pesalama

    ReplyDelete
  8. Unga ellarukkum government 🍌 than thara poguthuuuu

    ReplyDelete
  9. பகுதிநேர ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக 126 பேர தொடர்ந்த பணி நிரந்தரம் வழக்கு வந்த முதல் நாளான 20/01/2020 அன்றே Disposed ஆகி விட்டது வழக்கு எண்:W.P.878/2020 சந்தேகம் இருந்தால் சென்னை உயர்நீதிமன்றம் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. Sir ellam ok sir,,,,pet,+ drawing tamil case,enna achinu therinja sollunga sir

      Delete
  10. இனிமேல் ஆசிரியர் வேலைக்கு யாரும் படிக்காதீர்.

    ReplyDelete
  11. no chance part time teachers for permanent job

    ReplyDelete
  12. special teachers omr sheet repeat scan panna porankala
    m.

    ReplyDelete
  13. special teachers omr sheet marupadium scan panna poramkalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி