62 காலி பணியிடங்களுக்கு 12 ஆயிரத்து 652 பேர் விண்ணப்பம் - kalviseithi

Feb 15, 2020

62 காலி பணியிடங்களுக்கு 12 ஆயிரத்து 652 பேர் விண்ணப்பம்


சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில், 62 காலிப் பணியிடங்களுக்கு, 12 ஆயிரத்து, 652 பேர் விண்ணப்பித்துள்ளனர்.சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின், ஆள் சேர்ப்பு நிலையம் சார்பில், காலிப் பணியிடங்களை நேரடியாக நிரப்ப,ஜன., 10ல், அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கல்வித் தகுதியாக, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மத்திய கூட்டுறவு வங்கியில், அலுவலக உதவியாளர்கள், 53, ஓட்டுனர் - 4, இதர கூட்டுறவு கடன் சங்கங்களில், அலுவலக உதவியாளர் - 5 என மொத்தம், 62 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.இதற்கான விண்ணப்பம், பிப்., 7 வரை பெறப்பட்டது. அலுவலக உதவியாளர் பணிக்கு, 12 ஆயிரத்து, 201; ஓட்டுனர் பணிக்கு, 451 என மொத்தம், 12 ஆயிரத்து, 652 பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஒரு பணிக்கு, சராசரியாக, 204 பேர்விண்ணப்பித்துள்ளனர். இதனால், கடும் போட்டி நிலவுகிறது.
இதில், 90 சதவீதம் பேர், பி.ஏ.,- பி.இ.,- எம்.இ., உள்ளிட்ட பட்டதாரிகள் ஆவர். நேர்காணல் நடத்தி, இடஒதுக்கீடு அடிப்படையில், பணி ஆணை வழங்கப்படுகிறது. இதற்காக, தகுதி அடிப்படையில், அழைப்பு கடிதம் அனுப்புவதற்கான பணிகள், முடுக்கி விடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி