தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் பிடித்தம் - பிடித்தம் செய்த தொகை - வருமான வரி பிரிவு 80CCD ( 1 ) , 80CCD ( 2 ) , 80CCD ( IB ) - இன்கீழ் காண்பிப்பது குறித்து தெளிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2020

தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் பிடித்தம் - பிடித்தம் செய்த தொகை - வருமான வரி பிரிவு 80CCD ( 1 ) , 80CCD ( 2 ) , 80CCD ( IB ) - இன்கீழ் காண்பிப்பது குறித்து தெளிவுரை


பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது , 80CCD - இல் எந்த பிரிவின்கீழ் காண்பிப்பது என்பது குறித்து கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது .

1 . பிரிவு 80CCD ( 1 ) - இல் 10 % ( Basic Pay + DA ) மட்டுமே கழிவு செய்து கொள்ளலாம் . மேலும் பிரிவு 80C , 80CCC + 80CCD ( 1 ) கீழான கழிவுகளுக்கான தொகை சேர்த்து அதிகபட்சமாக ரூ . 1 , 50 , 000 / - கழித்துக் கொள்ளலாம் .

 2 . பிரிவு 80CCD ( IB ) - இன் கீழ் ரூ . 50 , 000 / - வரை கழித்துக் கொள்ளலாம் . மேற்சொன்ன மூன்று பிரிவுகளிலும் சேராது அனுமதிக்கப்படும் ஒரு கூடுதல் கழிவு ஆகும் . இது மத்திய அரசு ஓய்வூதியத் திட்டங்களுக்கு பொருந்தும் .

3. உட்பிரிவு 80CCD ( 1 ) மற்றும் உட்பிரிவு 80CCD ( IB ) ஆகிய இரண்டின் கீழும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டப் பிடித்தம் செலுத்திய தொகைகளைக் கழித்து கொள்ளலாம் . எனினும் ஒரே தொகையை உட்பிரிவு 80CCD ( 1 ) மற்றும் உட்பிரிவு 80CCD ( IB ) ஆகிய இரண்டிலும் கழித்து கொள்ள முடியாது .

4 . பிரிவு 80CCD ( 2 ) - இல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் அரசால் செலுத்தப்படும் தொகையைக் கழிவில் கூட்டக்கூடாது . அப்படி கழிவில் கூட்ட வேண்டுமென்றால் வருவாய் கணக்கில் சேர்த்து காண்பித்து , பின்னர் கழிவில் சேர்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி