தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2020

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்!


தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு ஊக்குவிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


*💲🛑💲இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

*💲🛑💲தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 644 கோடி ஒதுக்கியது அந்தப் பள்ளிகளை இன்னும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கை ஆகும்.

*💲🛑💲இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து அவற்றைப் படிப்படியாக மூடும் நிலை ஏற்படும்.தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஒதுக்கீடு செய்யும் நிதியை அரசு பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கீடு செய்திருந்தால் அவற்றில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

 *💲🛑💲மேலும் மாணவர்களை நல்ல முறையில் கல்வி கற்க ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து செயல்பட வைத்தாலே அனைத்து தரப்பு பெற்றோர்களும் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்கும் நிலை உருவாகும்.


*💲🛑💲ஆண்டு இறுதித் தேர்வு நெருங்குவதை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான 17 பி நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

 *💲🛑💲இது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

6 comments:

  1. Kandipa.but apadi panna petti pettiya panam vanga mudiyatheee...

    ReplyDelete
  2. சத்தமா சொல்லுங்க,
    அரசுக்கு...

    ReplyDelete
  3. ஏழை மாணவர்கள்

    ReplyDelete
  4. ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு டெட் தேர்ச்சி பெற்றவர்களை அரசு நியமித்து அவர்களுக்கு தனியாரை சம்பளம் கொடுக்க சொல்லலாமே. அரசாங்கம் சொல்லும் சம்பளத்தை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி