இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு! - kalviseithi

Feb 17, 2020

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு!


இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சேர்க்கைக்கு, பிப்.28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

*💲🛑💲இதுகுறித்து இக்னோ மண்டல இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


 *💲🛑இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ) இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜனவரி 2020 பருவத்துக்கான மாணவா் சேர்க்கை, இணையதளம் (https://ignouadmission.samarth.edu.in/) மூலம் நடைபெறுகிறது.

*💲🛑💲இங்கு இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரா்களுக்கு கட்டண விலக்கும் அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்.28-ஆம்   தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

*💲🛑💲மேலும் விவரங்களுக்கு வேப்பேரியில் உள்ள இக்னோ மையத்தையோ, rcchennai.ignou.ac.in எனும் இணையதளத்தையோ அல்லது 044 26618438, 26618039 ஆகிய எண்களையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி