ஊதியபட்டியல் ஆன்லைன் குறைபாடுகளை சீரமைக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2020

ஊதியபட்டியல் ஆன்லைன் குறைபாடுகளை சீரமைக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.


நெல்லை மாவட்ட அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் செயலாளர் பால்ராஜ் விடுத்துள்ள அறிக்கை : ஒருங் கிணைந்த நெல்லை மாவட்டத்தில் 14 சார் நிலை கருவூலங் கள் செயல்படுகின்றன .

இதன் மூலம் அந்தந்தப்ப குதி ஆசிரியர் , அரசு ஊழி யர்களுக்கு மாத ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த பலன்களுக்கு ஒப் பளிப்பு செய்து பணப்ப லன் பெற்று வழங்குகிறது . சமீபகாலமாக அனைத்து சார்நிலை கருவூலங்களி லும் ஊதியம் உள்ளிட்ட அனைத்து பட்டியல்களை யும் ஐஎப்ஹைச் ஆர்எம் எஸ் முறையில் ஆன்லைன் மூலம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி பட்டியல் களை இசிஎஸ் முறையில் கொடுப்பதைவாங்கமறுக் கின்றனர் . எனவே உரிய காலங்க ளில் யாருக்கும் பணப்ப லன்கள் கிடைப் பது இல்லை . புதிய ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு திட்டம் மூலம் ஆன்லைனில் பட் டியல் வழங்குவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன . இதில் செயல்ப டுத்து பவர் நிலை , மேற் பார்வையாளர் நிலை , ஒப்புதல் அளிப்பவர் நிலை என 3 நிலைகள் உள்ளன . ' பட்டியல் தயார் செய்யும் முன் ஒவ்வொரு ஆசி ரியர்களின் தனிப்பட்ட விபரங்களையும்பாகம் 3ல் பதிவேற்றம் செய்யவேண் டியிருக்கிறது . இதில் பணியில் சேர்ந் தது முதல் பதவி உயர்வு வரையிலும் வருமானவரி நிரந்த கணக்கு எண் வரை யிலம் உள் ளீடு செய்ய வேண்டியுள்ளது . சர்வர் சரியாக வேலை செய்வதில்லை .

ஒவ்வொரு அலுவலகங்களிலும் முறையாக பயிற்சிபெற்ற அலுவலர்களும் இல்லை . எனவே விபரங்களை உள் ளீடு செய்வதற்கு போதுமான அவகாசம் கொடுக்கவேண்டும் . சர்வர் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . அலுவலக பணியாளர்க ளுக்கு போதிய பயிற்சியை மீண்டும் வழங்கவேண்டும் . அதுவரை இசிஎஸ் முறையில் வழங்கப்படும் பட்டியல்களை சார்நிலை கருவூலங்களில் பெற்று உடனுக்குடன் பணப்பலன்கள் கிடைக்க மாவட்ட கருவூல அலுவலர் உரிய வழிகாட்டதலை வழங்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி