மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான நுழைவுச் சீட்டுக்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள். - kalviseithi

Feb 19, 2020

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான நுழைவுச் சீட்டுக்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்.


முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் , அவர்களது பள்ளியில் + 1 பயிலும் மாணாக்கரின் மார்ச் 2020 மேல்நிலை மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான நுழைவுச் சீட்டுக்களைப் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1 . தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி + 1 மாணாக்கருக்கான மார்ச் 2020 , மேல்நிலை முதலாமாண்டு தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களைப் www . dge . tn . gov . in என்ற இணையதளத்திற்கு சென்று ( click here to access online portal - HSE March 2020 First Year - School User ID – Password ) 19 . 02 . 2020 ( பிற்பகல் 3 . 00 மணி ) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .

2 . + 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை , மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வின் போது மீண்டும் எழுதும் + 2 பள்ளி மாணாக்கருக்கு தனியாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்படமாட்டாது . அம்மாணாக்கர் எழுதவுள்ள + 2 தேர்வுகளுக்கான பாடங்களோடு , தேர்ச்சி பெறாத + 1 பாடங்களின் விவரங்களையும் பதிவு செய்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டாக பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் .

3 . பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . எக்காரணங்கொண்டும் பதிவிறக்கம் செய்வதற்கான நாட்கள் நீட்டிக்கப்படமாட்டாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி