வேதியியல் படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் ஏஐடிசிஇ பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2020

வேதியியல் படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் ஏஐடிசிஇ பரிசீலனை


மாணவர் சேர்க்கையை அதிக ரிக்க பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விதிகளை தளர்த்த ஏஐடிசிஇ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நம் நாட்டில் 3,200-க்கும் மேற் பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இதில் பொறி யியல் படிப்புகளுக்கு 13.2 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கிடையே வேலை வாய்ப்பு குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பொறியியல் சேர்க்கை குறைந்து வருகிறது.கடந்த ஆண்டில் மட்டும் தேசியளவில் சுமார் 50 சதவீத பொறியியல் இடங்கள் நிரம்ப வில்லை.

இதையடுத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) செய்து வருகிறது. அந்தவகையில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விதிகள் தளர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஏஐசிடிஇ உயரதிகாரிகள் கூறியதாவது: மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் கணிதம், இயற் பியல், வேதியியல் பாடங்களை படித்திருந்தால் மட்டுமே பிஇ, பிடெக் படிப்பில் சேரமுடியும். இதை விதியை தளர்த்தி வேதியி யல் பாடத்தை விருப்பப் பாட மாக மாற்ற பரிசீலனைசெய்து வருகிறோம்.


அதாவது வேதியி யல் பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டியதில்லை. அதன்படி பொறியியல் படிப்பு களில் சேர கணிதம், இயற் பியல் பாடங்களுடன் உயிரியல், வேளாண்மை, கணினி அறிவி யல், தகவல் தொழில்நுட்பம், வேதியியல், வணிக ஆய்வுகள் போன்ற ஏதேனும் ஒரு விருப்பப் பாடத்தை சேர்த்து படித்திருந்தாலே சேரலாம்.

இந்த விவகாரத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிட மும் கருத்துருகள் கேட்கப்பட் டுள்ளன.

அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த மாற்றம் அமலானால் பொறி யியல் படிப்புகளில் சேர்க்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment:

  1. நீ ப்ரீயா கொடுத்தாலும் யார் வந்து சேர மாட்டாங்க இப்ப இருக்கிற நிலைமைக்கு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி