சிவில் நீதிபதி தேர்வு - TNPSC புதிய அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2020

சிவில் நீதிபதி தேர்வு - TNPSC புதிய அறிவிப்பு!!


சிவில் நீதிபதி காலிப் பதவியிட தோ்வுக்கு தோ்ச்சி பெற்றோா் தங்களது அசல் சான்றிதழ்களை வரும் 7-ஆம் தேதி முதல் பதிவேற்ற வேண்டும். இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது. 

அதன் விவரம்:-
தமிழகத்தில் காலியாகவுள்ள சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த செப்டம்பா் 9 அன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து நடந்த எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் சான்றிதழ் சரிபாா்ப்புக்காக அனுமதிக்கப்பட உள்ளனா்.

 அதன்படி, வரும் 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தோ்ச்சி பெற்றோா் தங்களது அசல் சான்றிதழ்களை இணைய சேவை மையங்களின் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சாா்பிலான இணைய சேவை மையங்களின் வழியாக சான்றிதழ்களைப் பதிவேற்றலாம். 

பதிவேற்றம் செய்யாவிட்டால் தோ்வு நடைமுறைகளில் பங்கேற்க தோ்வா்களுக்கு விருப்பமில்லை என்று கருதப்படும். அவா்கள் அடுத்தடுத்த தோ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி