தற்போதைய சட்டமன்ற கூட்டத்திலாவது,110 விதியின் கீழே TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு வருமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2020

தற்போதைய சட்டமன்ற கூட்டத்திலாவது,110 விதியின் கீழே TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு வருமா?


தற்போதைய சட்டமன்ற கூட்டத்திலேயே 110 விதியின் கீழே TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு வலியுறுத்தல்

RTE Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET கட்டாயம் என்ற சூழல் உள்ளது.

தமிழகத்தில் RTE அமலாக்கம்  அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1700 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனவும் , (அரசு பள்ளிகள் மற்றும் மைனாரிட்டி பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை என்று கூறப்படுகிறது)

23/8/10 முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிந்தல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்த அனைத்து அதிகாரிகளினால், தற்போது வரை சுமார் 1700 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க,

TET நிபந்தனைகளில் கொண்டு வரப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பணிநிறைவு பெறும் சூழலிலும், இன்றும் மன வருத்தத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.

பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும், பணியில் உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் தமிழக அரசு பாதுகாப்பு தரும் எனவும்,  அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இன்று வரை முழுமையான அரசானை பிறப்பிக்கப்படவில்லை. 

தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே
மதிப்புமிகு தமிழக அரசு கொள்கை முடிவு செய்து நல்ல அறிவிப்பு வெளிவிடும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.

தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தின் மூலம் 110 விதியின் கீழ்,
RTE - TET சிக்கல் சரிசெய்யும் பொருட்டு தற்போது ஆசிரியர் பணியில் உள்ள அனைவருக்கும் வரும் விரைவில் புத்தாக்கப்பயிற்சி அளித்து TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க கொள்கை முடிவினை மாண்புமிகு தமிழக முதல்வர் / கல்வித்துறை அமைச்சர் மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதுகாப்பு பெறும்" என TNASA தமிழக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

5 comments:

  1. பாஸ்பன்னவங்களுக்கு முதலில் பணி வழங்க நடவடிக்கை எடு

    ReplyDelete
  2. வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஐந்தையும் தவற விட்டவர்கள் வழக்கம் போல் பணபலத்தால் இப்போதும் சாதிக்க வாய்ப்புகள் உள்ளது

    ReplyDelete
  3. Nokia Murugan sir.... Super. Vaazhthukkal

    ReplyDelete
  4. 2013 passed candidate yana kuchi mitta sappuratha

    ReplyDelete
  5. 2013 passed candidate ku job podunga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி