10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்குஆல் பாஸ் போடுங்க..!! புதிய ஐடியா கொடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம்..!! - kalviseithi

Mar 26, 2020

10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்குஆல் பாஸ் போடுங்க..!! புதிய ஐடியா கொடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம்..!!


1 முதல் 9 ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது அதே நேரத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியளிக்க ஆவன செய்ய வேண்டும் என தமிழ்நாடுஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன். வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :- கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களை காப்பாற்ற தீவிரநடவடிக்கைகள் எடுத்துவரும் தமிழ்நாடு அரசை பாராட்டி மகிழ்கிறோம். 21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாகஉள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு 1 ஆம்வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.

பேரிடர் காலக்கட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையான தாகும் .உயிரா படிப்பா என்றால் உயிரே முக்கியம் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். ஆகையால் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கவே இல்லை. 11 ம் வகுப்பிற்கு கடைசித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு கடைசித்தேர்வில் 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை.தேர்வுஎழுதாதவர்களுக்கு மறுதேதி அறிவிக்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவும் மின்னல் வேகத்தில் பரவிவருகிறதென்றுசுகாதாரத்துறை அமைச்சர் எச்சாரிக்கை விடுத்துள்ளார். மாண்புமிகு பிரதமர் அவர்களும் உயிர் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் வலியுறுத்தியுள்ளிர். இந்நிலையில் எதிர்கால மாணவர்களின் நிலைக்குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும் மனஉளைச்சலிலும் உள்ளார்கள்.வீட்டிலேயே முடங்கிஉள்ளதாலும் குழந்தைகளின் மேற்படிப்பு என்னவாகுமோ என்ற குழப்பத்தில் உள்ளார்கள்.

எனவே 10,11 மற்றூம் 12 ஆம் வகுப்புகளின் அனைத்துப் பொதுத்தேர்வுகளையும் ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி அறிவித்திட வேண்டுகிறேன்.மேலும் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மாணவைர்கள் தங்களின் மேற்படிப்பில் பாடப்பிரிவினை தயார் செய்வதற்கு அரசே ஒரு சிறப்புத்தேர்வு வைத்து தேர்வுசெய்து கல்லூரிகளில் இடமளிக்கலாம். ஏற்கனவே மருத்துவம் பொறியியல் படிப்புகளுக்கு 1985 ஆண்டில் அன்றைய முதலமைச்சர் அவர்கள் தேர்வுகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று கலை அறிவியல் கல்லூரிகளில் விரும்பியப் பாடங்களை தேர்வு செய்ய மாநில அரசே சிறப்புத்தேர்வு வைத்து மாணவர்களையும், கல்லூரிகளையும் தேர்வுசெயது அளிக்கலாம். மேலும் பெற்றோர்கள் மாணவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகுமுதலமைச்சர் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சிஅறிவிக்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

25 comments:

 1. Oc la apdiye oooooo* podalam ponga....

  ReplyDelete
 2. Please give proper and good reasonable ideas.

  ReplyDelete
 3. APADIYE 2020 MAY MONTH SALARYA CM FUND DONATION.KU THANDHUDUNGA...
  UNGALA NINAICHU PERUMA PADAROM...

  ReplyDelete
 4. will this mark cant be considered for any case ?
  in future it will be a problem to the individual .
  for example 2014 all tet passed teachers 10,12 marks had been taken for weightage .

  ReplyDelete
  Replies
  1. அந்த அளவுக்கு deep.a போக வேண்டாம்...

   Delete
  2. fact..... in future could be

   Delete
  3. Now a days no weightage marks

   Delete
 5. Totally education will be spoiled

  ReplyDelete
 6. Totally education will be spoiled

  ReplyDelete
 7. முட்டாள்தனமான கோரிக்கை.

  ReplyDelete
  Replies
  1. Question paper ku spelling theriyanum first... Apo unga lachanam eppadi irukum...

   Delete
 8. 10 how will they calculate marks 11 group mark based only 480 above fees consider

  ReplyDelete
 9. I am a teacher no exam all pass announcement will be soon through our Tamil nadu government

  ReplyDelete
 10. First of all unknown fellows change your profile name... come with original or Nick name...

  ReplyDelete
 11. அவசரம் வேண்டாம்.எல்லாம் நன்றாக இருக்கும் நாம் முதலில் தற்காப்போடு இருப்போம்.மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறுஞ்செய்தி அனுப்புவோம்.அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கின்றது ஒத்துழைப்போம்.நன்றி.இராசகணபதி ஆசிரியர்.இராசிபுரம்.

  ReplyDelete
 12. oru manavan allam exam la 15 mark adutha pass poduka

  ReplyDelete
 13. Unknown characters should reveal them from known parents

  ReplyDelete
 14. தமிழ் நாடு ஆசிரியர் கழகம் கூறியது போல் அனைவரையும் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.இன்று வரை பத்தாம் வகுப்பு குழந்தைகள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.இதில் காலாண்டு அரையாண்டு மார்க் அடிப்படையில் தேர்ச்சி என்றால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனக்கவலை அடைவர்.எத்தனை குழந்தைகள் இந்த மூன்று மாதங்கள் கடினமாக உழைத்திருப்பார்கள்.மாற்றுதிறன் குழந்தைகளையும் நினைத்து பார்க்க வேண்டும். நல்ல தையே செய்து வரும் நம் தமிழக அரசு இதிலும் நல்ல முடிவெடுக்க வேண்டும்.

  ReplyDelete
 15. Orunal vittu orunal exam conduct pannalam, problem elam over ana pinna

  ReplyDelete
 16. Please cancel 10 th std exam
  1 exam for 11 th std promotion
  This is good idea

  ReplyDelete
 17. Venam 12 mark mansider pannattum 10th 11th mattum consider pannatum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி