பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2020

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!


பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்து 3 வாரங்களுக்கு பிறகு முடிவு அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் தகவல் .

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவுக்கு உட்பட்ட நம்பியூர் , எலத்தூர் பேரூராட்சிகள் மற்றும் தேசிய தரச்சான்றிதழ் பெற்ற நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையம் , ஊராட்சி ஒன்றிய அலு வலகம் ஆகிய இடங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் நேற்று திடீர் ஆய்வு செய்தார் .

பின் னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் 1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரையான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது . பொதுமக்கள் அரசின் உத்தரவை கடைபிடித்து 21 நாட்கள் அரசுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்கவேண்டும் . காலம் , நேரம் கருதாது மக்கள் பணியாற்றி வரும் டாக்டர்கள் , செவிலியர்கள் , மருந்து வணி கர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகை நிருபர்க ளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கி றேன் .

மனநலம் குன்றியோர் , சாலையோரம் வசிப்பவர்கள் என அனைவருக்கும் உணவுகள் வழங்க தயார் செய்து கொண்டி ருக்கிறோம் . தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது . தனியார் பள்ளிகள் கட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தப்படுவது சம்பந்த மாக இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கப்பெற வில்லை .

அதுபோல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றறிக்கைகள் வழங்கப்படும் . தொழில் வரி , சொத்து வரி செலுத்துவது குறித்து முதல் - அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் . 21 நாட்கள் ( 3 வாரங்கள் ) தடை உத்தரவு முடிந்த பிறகு தான் பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் . இவ்வாறு அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் கூறினார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி