பொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2020

பொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு.




மார்ச் 2020 , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் , தேர்வர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

1 . பார்வையில் காணும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகளில் அறிவுறுத்தியவாறு தேர்வர்களின் பாதுகாப்பு நலன் கருதி , ஒவ்வொரு நாளும் தேர்வு துவங்குவதற்கு முன்பு , தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள் மற்றும் தேர்வுப் பணி நடைபெறும் அறைகள் ஆகியவற்றில் உள்ள மேசை , நாற்காலி , இருக்கைகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் . அதன் பின் , இருக்கையில் எழுதப்பட்டிருக்கும் தேர்வெண்கள் ஏதேனும் அழிந்திருந்தால் தேர்வெண்களை மீண்டும் எழுதி தேர்வர்கள் சரியான இருக்கையில் அமர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

2 . தேர்வெழுதுவதற்கு முன்னதாக , தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள பள்ளிக்கல்விதுறை இயக்குநர் அறிவுறுத்தியவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

3 . தேர்வு முடிவுற்ற பின்பும் தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் .

4 . தேர்வர்கள் தங்களுடன் Hand Sanitizers எடுத்து வந்திருந்தால் , அதனை தேர்வறைக்குள் எடுத்துவர அனுமதிக்கலாம் .

5 . சளி , இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் எவரேனும் முகக்கவசம் அணிந்து வந்தால் , முகக்கவசத்துடன் தேர்வெழுத அனுமதிக்கலாம் . 6 . தேர்வறையில் தேர்வர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வைக்கவேண்டும் .

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி