அன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... - பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக ஒரு மடல் - kalviseithi

Mar 22, 2020

அன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... - பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக ஒரு மடல்

அன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு...

கொரோனோ எனும் பெரிய அரக்கனை எதிர்கொண்டு அதிலிருந்து மனித சமூகத்தை வெளி கொண்டு வருவது நம் அனைவரின் வேண்டுதலும் பொறுப்புணர்வும் .

வரும் 27ம் தேதி பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கடந்த ஒரு வருடமாக உழைப்பை நாம் வழங்கி வந்தோம். 

தற்போது பேரவையில் தமிழக முதல்வர் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு என்ற தகவலை வழங்கியுள்ளார்.

மேலும்  சூழ்நிலையை பொறுத்து ஏப்ரல் 15 முதல்  தேர்வை துவங்கலாம் என ஆலோசித்து வருகின்றனர்.

அது கோரோனா பரவலை பொறுத்து மாறுபடும்.

எனவே கூடுதலாய் 25 நாட்கள் நமக்கு தேர்விற்கு தயாராக வாய்ப்பு கிடைத்துள்ளது.

விடுமுறை தினங்களை திருப்புதலுக்காக பயன்படுத்துங்கள்.

ஆலோசனை பெற ஆசிரியர்களுக்கு போன் செய்யுங்கள்.

இந்த 25 நாட்கள் இடைவிடுத்து _ நேரடியாக தேர்விற்கு செல்லுதல் நிச்சயம்  உங்களது ஒரு வருட உழைப்பின் பலனை முழுமையாக தராமல் போகலாம்.

எனவே தினமும் அட்டவணையிட்டு படிக்க முற்படுங்கள்.

காலை 6- 8 கணிதம்
காலை 9- 11 ஆங்கிலம்
மதியம் 11- 1 அறிவியல்
மாலை 4 - 6 தமிழ்
மாலை 6 - 8 ச.அறிவியல்

என இயன்றவரை காலத்தை உபயோகமாய் பயன்படுத்துங்கள்.

உடனிருந்து வழிநடத்த சூழல் இல்லாததால் - நீங்களே ஆசிரியர் நீங்களே மாணவர்.

உங்களது எதிர்கால வளர்ச்சிக்காக முயற்சிகளை பயிற்சிகளை முன்னெடுங்கள்.

தேர்வு குறித்த அடுத்த கட்ட அறிவிப்புகள் தொலைகாட்சி  செய்திகள் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்

* அதிகம் நீர் அருந்துங்கள்
* பழம் , காய்கறிகள் கூடுதலாய் சேர்த்து கொள்ளுங்கள்.
* 6 முறையாவது கைகளை கழுவுங்கள்.
* இயன்றவரை வெளிவருவதை ஒன்று கூடுவதை தவிருங்கள்

கொரோனாவை கொள்வோம்.உடன் பொது தேர்விலும் வெல்வோம்.

வாழ்த்துகள்.

- பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக.

9 comments:

 1. 'கொரோனாவைக் கொள்வோம்' என்ற பிழை இந்த ஒட்டு மொத்த பதிவையும் அர்த்தமற்றதாக்கி விட்டது. கொல்வோம் கொரோனாவை வெல்வோம் தேர்வினை.

  ReplyDelete
 2. 'கொரோனாவைக் கொள்வோம்' என்ற பிழை இந்த ஒட்டு மொத்த பதிவையும் அர்த்தமற்றதாக்கி விட்டது. கொல்வோம் கொரோனாவை வெல்வோம் தேர்வினை.

  ReplyDelete
 3. Please don't give much pressure to them. 10 hrs sleep. 6hrs study time is enough

  ReplyDelete
 4. கொல்வோம் என பிழை திருத்தம் செய்க.
  ஆசிரியர்களின் கடமை பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமே.
  * படித்து தேர்ச்சி பெறுவது மாணவர் கடமை

  ReplyDelete
 5. அருமையான மடல். கடைபிடித்தால் நலம். மடலை எழுதியவரும்.

  ReplyDelete
 6. 11th exam ethavathu mathi erukkangala

  ReplyDelete
 7. Ada ponga da... Sslc marks vechu 10 paisa ku prayojanam ila.....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி