இடைநிலை ஆசிரியர்களை, தேர்வுப்பணியில் இருந்து விடுவிக்க கோரிக்கை! - kalviseithi

Mar 5, 2020

இடைநிலை ஆசிரியர்களை, தேர்வுப்பணியில் இருந்து விடுவிக்க கோரிக்கை!


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளில், இடைநிலை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளதால், பள்ளிகளில், மற்ற வகுப்புகளுக்கான பாடம் பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத் தேர்வு, நேற்று துவங்கியுள்ளது. 2ம் தேதியே, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி விட்டது.பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு, 44 ஆயிரத்து, 500 ஆசிரியர்கள்; பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு,41 ஆயிரம் ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணியில், பிளஸ் 2 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தான் ஈடுபடுவர். 10ம் வகுப்பு தேர்வுக்கு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு எடுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தேர்வுப் பணி வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு பணிகளில், பட்டதாரி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும், இடைநிலை ஆசிரியர்களும், தேர்வுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அரசு, அரசு உதவி மற்றும் தனியார்என, அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களும், தேர்வுப் பணிக்கு சென்றுள்ளதால், பெரும்பாலான பள்ளிகளில், பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல், பல வகுப்புகள் முடங்கியுள்ளன.

ஒன்று முதல், 10 வரையுள்ள வகுப்புகளுக்கு, மூன்றாம் பருவம் துவங்கி, ஒரு மாதம் கூட ஆகவில்லை; 75 சதவீத பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளன.இந்நிலையில், அந்த வகுப்புகளின் ஆசிரியர்கள், தேர்வுப் பணிக்கு சென்று விட்டதால், மூன்றாம் பருவ பாடங்களை, மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள், வரும், 31 வரை நடக்க உள்ளதால், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வு வரும் வரை, பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, அடிப்படை கல்வி கற்கும் மாணவர்களுக்கு, முறையாக பாடம் நடத்தும் வகையில், இடைநிலை ஆசிரியர்களை, தேர்வுப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

1 comment:

 1. 😡😡😡 *அரசு பணத்தை விரயம் செய்யும் கல்வி அதிகாரிகள்*


  *கல்வி அதிகாரிகளின் அலட்சியத்தால் அலைக்கழிக்கப்படும் (அவதியுறும்) ஆசிரியர்கள்*  😞😞😞😞😞😞
  *2019-2020 ஆம் கல்வியாண்டில் 21.11.2019 அன்று நடைபெற்ற மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் பணிவிடுவிப்பு பெற்று 25.11.2019 அன்று பணிமாறுதல் பெற்ற பள்ளியில் பணியில் சேர்ந்து விட்டனர்.ஆனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் மட்டும் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் 3 மாதங்கள் ஆகியும் பணிவிடுவிப்பு செய்யப்படாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் பணிவிடுவிப்பு செய்ய தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளிகளிலும் மூன்றிற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் அவர்கள் பணியிடத்தைக் காலிப்பணியிடமாக கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தற்காலிக ஆசிரியர்களும் 04.02.2020 முதல் பணியாற்றி வருகின்றனர்.ஒரே பணியிடத்தில் இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருவதுடன் இருவருக்கும் அரசு சம்பளம் வழங்குகிறது. இதனால் அரசு பணம் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணடிக்கப்படுகிறது. பணிமாறுதல் பெற்றும் பணிவிடுவிப்பு செய்ய உரிய தகுதிகள் இருந்தும் கடந்த 3 மாதங்களாக பணிவிடுவிப்பு செய்யப்படாமல் எவ்வித காரணங்களும் எவ்வித ஆணையும் அளிக்கப்படாமல் ஆசிரியர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு அதீத மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களும், பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.*


  *இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கின்றனர்.*

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி