மாணவனின் கண் பார்வை பாதிப்பு பள்ளிகல்வித் துறைக்கு, 'நோட்டீஸ்' - kalviseithi

Mar 5, 2020

மாணவனின் கண் பார்வை பாதிப்பு பள்ளிகல்வித் துறைக்கு, 'நோட்டீஸ்'


ஆசிரியை தாக்கியதில், மாணவனின் இடது கண்பார்வை பறிபோனது தொடர்பாக, பள்ளி கல்வித் துறை பதிலளிக்க, மனித உரிமை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த வேலுவின் மகன், கார்த்திக், 14. மேடவாக்கம் அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார்.பிப்ரவரியில், வகுப்பறையில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, பள்ளி ஆசிரியை இரும்பு, 'ஸ்கேலால்' மாணவனின் பின்பக்க தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவனின் இடது கண் பார்வை பாதித்தது.இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், பள்ளி கல்வித் துறை செயலர் மற்றும் இயக்குனருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், 'மாநிலம் முழுவதும், மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, தவறு செய்த ஆசிரியை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, மாணவனுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என, இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி