கொரோனா பாதிப்பு - அரசு ஊழியர், ஆசிரியர் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2020

கொரோனா பாதிப்பு - அரசு ஊழியர், ஆசிரியர் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு!


கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யில் பாதிக்கப்படும் ஏழை , எளிய மக்களுக்கு உதவும் வகை யில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக என்ஜிஓ சங்கம் அறிவித்துள்ளது .

முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை , உள்ளாட்சித் துறை , நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை , காவல்துறை , போக்குவரத் துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர் கள் மிகுந்த அக்கறையோடு பணியாற்றி வருகிறார்கள் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறோம் .

இந்த கடினமான சூழ்நிலையில் , கரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் , அமைப்புசாரா தொழிலாளர்கள் , தினக்கூலி பணியாளர்கள் , ஏழை எளிய மக்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலும் தமிழக அர சில்பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க இசைவு தெரிவித்துக் கொள் கிறோம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

5 comments:

  1. யாரிடமும் கேட்காமல். முடிவெடுக்கிறது சங்கங்கள்

    ReplyDelete
  2. யாரிடமும் கேட்காமல். முடிவெடுக்கிறது சங்கங்கள்

    ReplyDelete
  3. யாரைக் கேட்டு முடிவு செய்கின்றீர்கள்????

    ReplyDelete
  4. சோழியன் குடுமி சும்மா ஆடாது

    ReplyDelete
  5. 5 நாள் ஊதியம் கூட வழங்கலாம்... தினக்கூலிகளின் கஷ்டத்தை போக்கும் விதமாக....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி