மாணவர்சேர்க்கையை உயர்த்தும் ஆசிரியர்களுக்கு ' வெரிகுட் ' விருது ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2020

மாணவர்சேர்க்கையை உயர்த்தும் ஆசிரியர்களுக்கு ' வெரிகுட் ' விருது !


அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பாடுபடும் ஆசிரியர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கும் புதிய திட்டத்தை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தவுள்ளது.

அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சரிந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்கள், கற்பித்தல் முறைகள், பள்ளிகளில் உள்ள கற்றல் வசதிகளை எடுத்துக்கூறி, கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால், சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்பதால், சேர்க்கை தொடர்பான பணிகளில், அவர்களை ஆர்வமுடன் ஈடுபடுத்தும் வகையில், அவர்களுக்கு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி