அரசு ஊழியர்களுக்கு முன ஊதிய உயர்வு ரத்து - தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு! - kalviseithi

Mar 12, 2020

அரசு ஊழியர்களுக்கு முன ஊதிய உயர்வு ரத்து - தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு!


அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது .

தமிழக அரசு ஊழியர்கள் , ஒரு துறையில் பணியாற்றும்போது அந்த துறைக்கு தேவையான கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதி இருந்தால் இரண்டு முதல் மூன்று முன் ஊதிய உயர் வுகள் வழங்கப்பட்டு வந்தது . இதன்மூலம் , சிலர் அரசு துறையில் பணியில் சேர்ந்த பிறகு கூட உயர் படிப்புகளை படித்து கூடுதல் சம்பள உயர்வை பெற்று வந்தனர் . இந்நி லையில் , தமிழக அரசு இதுவரை வழங்கிவந்த கூடுதல் முன் ஊதிய உயர்வை ரத்து செய்வ தாக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளி யிட்டுள்ள அரசாணை யில் , " தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் உயர் கல்வி கற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு உடனடி யாக ரத்து செய்யப்படுகிறது ” என்று கூறியுள்ளார்.

 இதன்மூலம் அரசு பணியில் உள்ளவர் கள் கூடுதல் படிப்பை காரணம் காட்டி இனி கூடுதல் சம்பளம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ADVANCE INCREMENT GO - Download here


3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி