தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணிமனை - CEO செயல்முறைகள்! - kalviseithi

Mar 17, 2020

தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணிமனை - CEO செயல்முறைகள்!2019 - 20 - ம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புதுச்சேரி Sri Aurobindo Society ( SAS ) வாயிலாக Zero Investment Innovation for Education Initiatives ( ZHEI ) " என்ற தலைப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பணிமனை மற்றும் அதனை தொடர்ந்து பணிமனையில் கலந்துக்கொண்ட ஆசிரியர்களுக்கு சிறப்பான உத்திகளுக்கான கண்காட்சியும் , கல்வி மாவட்ட அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள் 31 . 03 . 2020 வரை மூட உத்தரவிடப்பட்டதின் பேரில் 19 . 03 . 2020 அன்று நடைபெற இருந்த பணிமனை மற்றும் 02 . 04 . 2020 அன்று நடைபெற இருந்த கண்காட்சி ஒத்திவைக்கப்படுகிறது . பணிமனை மற்றும் கண்காட்சி நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அனைத்து கல்வி மாவட்ட அலுவலர்கள் , குறுவளமைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ( பொ ) மேற்பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி