பல்கலைக்கழக மானியக்குழுவின்
( யு . ஜி . சி . ) செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் , அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும்
அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது :
உயர்கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் , கற்பித்தல் அல்லாத பணிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களை நியமிப்பது , அவர்க ளுக்கு ஊதிய விகிதம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவால் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன . அதனை பின்பற்றியே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணி நியமனங்கள் , பதவி உயர்வு , ஊதிய விகிதம் வழங்கப்பட வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டும் இருந்தது . தற்போது சில கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் பலருக்கு உரிய தகுதிகள் இருந்தும் பதவி உயர்வு அளிக்கப்படா மல் , தாமதம் காட்டி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன . எனவே , கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உரிய தகுதிகள் கொண்ட பேராசிரியர்களுக்கு உடனே பதவி உயர்வை வழங்க வேண்டும் . எந்த காரணத்துக்காகவும் பதவி உயர்வைதாமதப்படுத்தவோ , நிறுத்திவைக்கவோ கூடாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
TRB-POLYTECHNIC PG-TRB MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)
ReplyDelete