நாளை ரேஷன் கடைகள் செயல்படாது – அப்போ 1000 ரூபாய் எப்படி கிடைக்கும்..? தமிழக அரசின் அறிவிப்பு..! - kalviseithi

Apr 4, 2020

நாளை ரேஷன் கடைகள் செயல்படாது – அப்போ 1000 ரூபாய் எப்படி கிடைக்கும்..? தமிழக அரசின் அறிவிப்பு..!


கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம். இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசாங்கம்  ரேஷன் கார்ட்களுக்கு  1000  ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என அறிவித்துள்ளது.

டோர் டெலிவரி:

கொரோனா  பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் பீதியில் உள்ளதால் அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சமூக விலகலை மேற்கொள்ளும்படி இந்தியா அரசு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்து வருகின்றனர்.

நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதாவது ரேஷன் கடைகளில் நாளை அரிசி அட்டைக்காரர்களுக்கு வீட்டில் சென்று 1000 ரூபாய் மற்றும் இலவச பொருட்களுக்கான டோக்கன்   தரப்பட உள்ளது. எனவே கடைகள் இயங்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி