மே 26 முதல் பத்தாம் வகுப்பு தேர்வு - தமிழக அரசு ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2020

மே 26 முதல் பத்தாம் வகுப்பு தேர்வு - தமிழக அரசு ஆலோசனை


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மே 26 முதல் 5 நாட்களில் நடத்தி முடிக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிடும். இந்தாண்டு கொரோனா தொற்று பரவியதால், மார்ச் 22ம் தேதி ஒருநாளும், பின் மார்ச் 25 முதல் ஏப்.14 வரை தொடர்ந்தும் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்தது.

பிளஸ்2தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குவது தடைபட்டு உள்ளது.தற்போது ஊரடங்கு 2வது கட்டமாக மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், அடுத்து எப்போது தேர்வை நடத்தலாம் என கல்வி, தேர்வுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மே 3ல் ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா பாதிப்பு முற்றிலும் முடிவுக்கு வர எத்தனை நாளாகும் என தெரியவில்லை.புதிய கல்வி ஆண்டு பாதிக்காத வகையில் பொதுத் தேர்வை நடத்தி முடித்துவிட வேண்டும் என கல்வி அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, பத்தாம் வகுப்பு தேர்வை மே 26 முதல் 30க்குள் தொடர்ந்து 5 நாட்களில் நடத்தலாம். உடனே விடைத்தாள் திருத்தும் பணியை துவக்கலாம் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியை மே 3வது வாரத்திலேயே துவங்கலாம். 120க்கும் மேற்பட்ட கல்வி மாவட்ட அதிகாரிகள் உள்ளதால் பத்து நாட்களில் இப்பணியையும் முடித்து விரைவாக தேர்வு முடிவை ஜூன் மாதத்திற்குள்ளாக 10, 12வது வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.

இதனால் கல்விஆண்டு அதிகம் பாதிக்காத வகையில் வகுப்புகளை துவக்கலாம் எனவும் கருதுகின்றனர். அரசு ஒப்புதல் கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 comments:

  1. Upsc சொல்லிட்டாங்க..
    Tnpsc சொல்லிட்டாங்க...
    Tneb சொல்லிட்டாங்க...
    Stateboard சொல்லிட்டாங்க...

    TRB??? TET??

    Exam வருமா?
    கடந்த 6 வருஷமா என்ன பண்ணோம் .. ஒன்னும் பண்ணல.. அதே தான் இந்த வருஷமும்

    ReplyDelete
  2. Pg trb chemistry kku posting unda? Illa Corona va l cancel agidu ha? June month podapaduma? Anybody knows?

    ReplyDelete
  3. How can we revise within one day all lessons ??? Please change the time table

    ReplyDelete
  4. Dear candidates POLYTECH trb exam may be August

    ReplyDelete
    Replies
    1. Intha year pgtrb varumaaa Sir

      Delete
    2. வாய்பில்லை

      Delete
    3. Sir SK neenga innuma nambittu irukinga 2 list varumnnu?vaippa illay, udane 1:2 ration why nnu ketpingale, trb board sollitanga phone panni kettadharkku,

      Delete
    4. நானும் கேட்டேன் இப்போதைக்கு டீஆா்பி வராதுனு சொன்னாங்க

      Delete
  5. Dear candidates POLYTECH trb exam may be August

    ReplyDelete
  6. Dear candidates POLYTECH trb exam may be August

    ReplyDelete
  7. Appa exam holidays eppa viduvinga

    ReplyDelete
  8. TNPSC Annual planar examinations when will conduct?

    ReplyDelete
  9. How can we revise for exam ???? We need time for maths,science,social science.10th how can we prepare social exam it have volume 1,2 so need time,this bad news for us.

    ReplyDelete
  10. +1 exam Chemistry, accountancy...when

    ReplyDelete
  11. தொடர்ச்சியாக 5 எக்ஸாம் வைத்தால்￰ 50% Fail தான்....அதற்கு சும்மா இருக்கலாம் ..

    ReplyDelete
  12. Very difficult to revise in one evening.... Please consider the leave days between exams...

    ReplyDelete
  13. மாணவர்களை ஏற்கனவே நன்று தயார் செய்த ஆசிரியர்கள் தற்போது கவலைப்பட தேவையில்லை.

    ReplyDelete
  14. What about plus one exam ie pending paper

    ReplyDelete
  15. மாணவர்கள் நலன் அவசியம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி