முதுநிலை மருத்துவ படிப்பு: தர வரிசை பட்டியல் வெளியீடு - kalviseithi

Apr 27, 2020

முதுநிலை மருத்துவ படிப்பு: தர வரிசை பட்டியல் வெளியீடு


முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு கவுன்சிலிங், இந்த வார இறுதியில் துவங்குகிறது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., பட்ட மேற்படிப்புகளுக்கு, 1,900 இடங்கள் உள்ளன.

இதில், 50 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரப்படுகிறது. மீதமுள்ள, 950 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கான, 250இடங்களும், மாநில அரசுக்கு உள்ளன.சென்னையில் உள்ள, அரசு பல் மருத்துவக் கல்லுாரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசுக்கு, எம்.டி.எஸ்., பட்டமேற்படிப்பு இடங்கள் உள்ளன.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக் கான இடங்களை, 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நிரப்ப, மருத்துவக் கல்வி இயக்குனரகம், கவுன்சிலிங் நடத்த உள்ளது.அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 2020 - 21ம் கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கு, நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், 'ஆன்லைனில்' விண்ணப்பித்து உள்ளனர். இதில், அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் உண்டு. பரிசீலனைக்கு பின், தர வரிசை பட்டியல்,www.tnhealth.gov.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 6,455 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

தர வரிசை பட்டியலில், முதல் மூன்று இடங்களை, அரசு டாக்டர்கள் பிடித்தனர். அரசு ஒதுக்கீட்டுக்கான, எம்.டி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், 744 பேர் இடம் பெற்றுள்ளனர்.அதேபோல், தனியார் மருத்துவக் கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான, எம்.எஸ்., படிப்பு தர வரிசை பட்டியலில், 2,689 பேர்; தனியார் பல் மருத்துவக் கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில், 328 பேர் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், எம்.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், ஆன்லைனில் நடந்து முடிந்துள்ளது. இதில், 10 தனியார் டாக்டர்கள், ஆறு அரசு டாக்டர்கள், கல்லுாரியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர்.

இதற்கிடையில், மே, 4க்குள், மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை, ஆன்லைனில் நடத்தி முடிக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கை, இந்த வார இறுதியில் நடத்தி முடிக்க, மருத்துவக் கல்வி இயக்குனரகம் முடிவு செய்துஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி