மே மாதம் சம்பளம் கொடுங்கள், பகுதிநேர ஆசிரியர்கள் உருக்கமான வேண்டுகோள். - kalviseithi

Apr 26, 2020

மே மாதம் சம்பளம் கொடுங்கள், பகுதிநேர ஆசிரியர்கள் உருக்கமான வேண்டுகோள்.


பேரிடர் கால உதவியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்தை அரசு கொடுக்க முதல்வர் ஆணையிட   வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செந்தில்குமார் கூறியது :- 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அவர்கள்  26-8-2011 சட்டசபையில் 110 விதியின் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களை ₹5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்க அறிவிப்பு செய்தார்.

இதற்காக ஆண்டிற்கு  அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்க ₹99 கோடியே 29 லட்சம் நிதி  ஒதுக்கினார். 

ஆனால் நியமனம் செய்த பின்னர்  மே மாதம் சம்பளம் தருவதில்லை. 

இப்படியே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் 8 ஆண்டுகள் முடிந்து விட்டது. 

இந்தமுறை கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்  குடும்பங்கள் நிலை கவலையுடன் உள்ளது.

 இந்த கஷ்டமான நேரத்தில் மே மாதம் சம்பளம் ₹7700 கொடுத்தால் பேருதவியாக  இருக்கும் என கோரிக்கை வைத்து  வருகின்றனர்.

2012 ஆம் ஆண்டு  நியமனம் செய்த 16549 பேரில்,  தற்போதுள்ள 12ஆயிரம் பகுதிநேர  ஆசிரியர்கள் குடும்பங்களை காப்பாற்ற, இந்தமுறை ஒருமாதம் சம்பளமான ₹7700ஐ மே மாதம் சம்பளத்தை கொடுத்து பேருதவி செய்திட முதல்வர் ஐயா அவர்கள் ஆணையிட வேண்டும்.  என்றார்.

தொடர்புக்கு
சி. செந்தில்குமார் 
மாநில ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 
செல் 9487257203.

8 comments:

 1. Sir unmaya daily wages workers ah Vida ipo adhigam kasta padrom atleast may month ku oru nivarana thogayachum kuduga sir

  ReplyDelete
 2. பல தனியார் பள்ளிகள் இன்றுவரை மார்ச் மாத ஊதியம் கொடுக்கவில்லை.கல்விசெய்தி அரசின் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டுசெல்லுங்கள்.உயிர்வாழ உதவுங்கள்.🙏🤲🙏

  ReplyDelete
 3. நிச்ச‌ய‌மாக‌ அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌
  வேண்டும்..அதுவே நியாய‌ம்..

  ReplyDelete
 4. Salary give me a government please

  ReplyDelete
 5. மாண்புமிகு முதல்வர் அய்யா அவர்கள் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டுகின்றோம்.

  ReplyDelete
 6. தங்களின் கோரிக்கைகளை அனைவரும் முதல்வரின் twitter பகுதிக்கு சென்று தெரியப்படுத்தவும் அது தான் சிறந்த வழி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி