தொடர் விடுமுறைக்குப்பின் பள்ளிகளை எப்போது திறப்பது? மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை​! - kalviseithi

Apr 29, 2020

தொடர் விடுமுறைக்குப்பின் பள்ளிகளை எப்போது திறப்பது? மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை​!


வரும் கல்வி ஆண்டில் மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரி யால் ஆலோசனை மேற்கொண்டார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளின் வகுப்புகள், தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் உட்பட அனைத்து கல்விப்பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கல்வி ஆண்டு தாமதம் தொடர்பாக உயர்கல்வி நிறு வனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைகள் வழங்கியுள்ளது. அதில், புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை கல்லூரி கள் செப்டம்பரில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவுகள் மேற்கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது.இதற்கான ஆலோசனைக் கூட்டம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்கள், செயலர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர். இதில் தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.ஊரடங்கு முடிந்தபின் புதிய கல்வி ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் யுஜிசியின் பரிந்துரைகள் தொடர் பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. அதில் பல மாநிலங்கள் யுஜிசியின் பரிந்துரைகளை ஏற்க முன்வந்துள்ளன. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் சில கோரிக்கைகளையும் முன்வைத் துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், பள்ளிக்கல்வியில் இணையவழி கற்றல், கற்பித்தல் வழிமுறைகளை ஊக்குவித்தல், ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கல்வி பற்றிய பயிற்சி தருதல், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விதிமீறலைத் தடுத்து நடவடிக்கை எடுப்பது, தொடர் விடுமுறைக்குப்பின் பள்ளிகளை எப்போது திறப்பது, பொதுத்தேர்வுகளின் நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. சார் பல தனியார் பள்ளிகள் இன்றுவரை மார்ச் மாத ஊதியமமே கொடுக்கவில்லை. பல லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களின் குடும்ப வாக்குகளை இனி நினைவில் வைத்து செயல்படவேண்டும்.நேரம் வரும் போது உரிய நியாயம் கிடைக்கும்.ஆட்சி மாற்றம் அவசியம் தேவை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லது நடக்க.வரும் தேர்தலில் இப்பது ஊதியம் கிடைக்காமல் நம் குடும்பம் பட்ட கஷ்டத்தை நினைத்து நல்லவர்களுக்கு வாக்களிப்போம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி