நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இயற்கை பானம்: தமிழக அரசு பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2020

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இயற்கை பானம்: தமிழக அரசு பட்டியல் வெளியீடு.


தமிழக அரசு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையுடன் இணைந்து, 'ஆரோக்கியம்' என்ற, சிறப்பு திட்டத்தை துவக்கியுள்ளது.இத்திட்டத்தில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றி, கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை,அரசு பரிந்துரை செய்து வருகிறது. அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானத்தை, அரசு மக்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இயற்கை பானம்

நாட்டு நெல்லிக்காய் - அரை துண்டு; துளசி - 20 இலைகள்; இஞ்சி - கால் துண்டு; எலுமிச்சை - கால் துண்டு; மஞ்சள் பவுடர் - கால் ஸ்பூன்; தண்ணீர் - 150 மில்லி, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து,வடிகட்டி பருக வேண்டும்.

பெரியவர்கள், 250 மில்லி - சிறியவர்கள், 100 மில்லி, அளவில், ஒரு நாளைக்கு, இரண்டு முறை பருக வேண்டும்.

சூடான பானம்

இஞ்சி - சிறிய துண்டு; துளசி - 10 இலை; மிளகு - கால் ஸ்பூன்; அதிமதுரம் - அரை ஸ்பூன்; மஞ்சள்பவுடர் - கால் ஸ்பூன்; தண்ணீர் - 250 மி.லி., - பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டிபருகவும்.

பெரியவர்கள், 50 மில்லி, - சிறியவர்கள், 20 மில்லி, அளவில், ஒரு நாளைக்கு இரண்டு முறை பருக வேண்டும்.வேறு நடைமுறை

* சிறிதளவு உப்பு கலந்த மிதமான வெந்நீரால், காலை மற்றும் மாலை நேரங்களில், வாய் கொப்பளிக்கவும். முகத்திற்கு ஆவி பிடிப்பது நல்லது.

*சூரிய ஒளி குளியல்: தினமும், காலை, 10:00 மணிக்குள்; மாலை, 4:00 மணிக்கு மேல், 15 - 20 நிமிடங்கள், சூரிய ஒளியில் நிற்கவும்.

இவ்வாறு, அரசு பரிந்துரைத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி