தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குதல் ஆணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2020

தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குதல் ஆணை வெளியீடு.


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி பாராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் அந்தந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழகம் | பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 2020 ( ஒரு மாதத்திற்கு மட்டும் ) மாதத்திற்கான ஊதியம் இணைப்பில் காணும் விவரப்படி வட்டாரக்கல்வி அலுவலர்களின் வங்கி கணக்குகளில் 18.04.2020 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட தொகையினை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு வழங்கி அதற்கான ஒப்புகை இரசீது பெற்று பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் ஆகியோரின் மேலொப்பத்துடன் 05.05.2020க்குள் இவ்வலுவலகத்தில் சமர்பிக்கவும் அதன் நகலினை சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இப்பணி நிதிசார்ந்த பணி என்பதால் , இப்பணியில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வட்டாரக்கல்வி அலுவலர்கள் மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3 comments:

  1. பிப்ரவரி மாதமா? மார்ச் மாசம் சம்பளம் வாங்கியாச்சு இவனுக என்ன லுசா? Parttime teachers க்கு சம்பளம் வருமா?

    ReplyDelete
  2. Sir, it's for PTA appointment for SGT vacancy..theriyama comment pannatheenga..athuvum oru CEO va loosunu sollalama..

    ReplyDelete
  3. 10 வருசம் permanent பன்னாததுக்கு என்ன வேனாலும் சொல்லலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி